ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியர்
ஒட்டுமொத்த இந்தியாவிற்கே ஆஸ்கர் வென்ற இந்திய பிரபலம் என்றால் முதலில் நியாபகம் வருவது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான். ஆனால் அவருக்கு முன்னதாகவே 32 வருடங்களுக்கு முன்பு பானு அதய்யா என்பவர் ஆஸ்கர் விருது வென்று பெருமை சேர்த்துள்ளார். அவர் தான் இந்தியாவில் முதல் முறையாக ஆஸ்கர் வென்ற திரைப்பிரபலம் ஆவார். சிறந்த ஆடை வடிவமைப்பாளரான பானு அதய்யா பாலிவுட், ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார்.
1950ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 1982-ம் ஆண்டு வெளிவந்த காந்தி திரைப்படத்திற்காக இவர் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை ஜான் மெல்லோ என்பவருடன் பகிர்ந்துக் கொண்டார். இதன் மூலமாக இவர் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். ஆனால் தனக்கு பிறகு ஆஸ்கர் விருதை பத்திரமாக பார்த்துக்கொள்ள யாரும் இல்லை எனக்கூறி, 2012ம் ஆண்டு அந்த விருதை ஆஸ்கர் அகாடமிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார்.
ஏசியன் நெட் நியூஸ்
Comments