கொஞ்சம் மார்பு கொடேன்/கவிதை./குபோதினி
கொஞ்சம் மார்பு கொடேன்
தொலைந்து போன உறக்கமெல்லாம்
உறங்கிவிட வேண்டும்
எல்லாமும் மறந்து
வெறும் காதலுடன் வாயேன்
மிச்சம் வைத்த முழுக்காதலும்
தின்று தீர்க்க வேண்டும்
கொஞ்சம் இறுக அணைத்து உறங்கி தொலையேன்
அழுது தீர்த்து உன் மார்பில் உறங்கும்போதே செத்துவிட வேண்டும்
கொஞ்சம் வந்து தொலையேன்
இந்த காதல் என்னை சிறுகச் சிறுக கொல்வதற்குள்
நமக்காய் ஒரு வாழ்வு
வாழ்ந்து செத்துவிட .....
Comments