இரும்பு மனுஷி இந்திரா காந்தி
இன்றைய - அன்றைய ரிப்போர்ட்;
நம்ம கவர்மென்டாலே ‘மகாத்மா’ என்பதை உறுதிப்படுத்தாத (இது தனி ஸ்டோரி) காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பொறகு, நம்ம இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான அல்லது அதிர்ச்சியான நிகழ்ச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சிதான். ஆமாம்.. கிட்டத்தட்ட 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் செக்யூரிட்டிகளாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதாவது சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா மீது சீக்கியர்களில் பலர் ரொம்ப ஆத்திரமா இருந்தாங்க. அதன் காரணமா, பி எம் இந்திரா காந்தியின் வூட்டிலே காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்த வேண்டாமுன்னு என்று இண்டெலிஜென்ஸ் டைரக்டர் கருத்து தெரிவித்தார். ஆனாக்க அந்த யோசனையை இந்திராகாந்தி ஏத்துகலை.
டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியோட வூடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த ரெண்டு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் இருந்துச்சு. இந்த வூட்டை அடுத்த பில்டிங், பிரதமரின் அலுவலகமாகும். இதனோட எண்டர்ன்ஸ் அக்பர் ரோட்டில் உள்ளது. ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குள்ள தூரம் சுமார் 300 அடியாகும். இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும்.. ஆனாலும், இந்திராம்மா நடந்தே செல்றதுதான் வழக்கம்.
1984 இதே அக்டோபர் 31ந்தேதி மார்னிங் 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் ஃபிலிம் ஒன்றை எடுக்கற்காக, வெளிநாட்டுப் ஜர்னலிஸ்ட் ஒருத்தர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். அவருக்குப் பேட்டியளிக்கத்தான் இந்திரா காந்தி தன்னோட வூட்டுலேயிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
முன்னாடியே சொன்னா மாதிரி ரெண்டு பில்டிங்களுக்கும் இடையே இருந்த நடைபாதையில் அவர் நடந்து வந்துக்கிட்டிருந்தார். அவருக்கு சுமார் 7, 8 அடி தூரத்தில் செக்யூரிட்டி ஆபிசர் தினேஷ் பட் மற்றும் 5 பாடி கார்ட்ஸ் (மெய்க்காப்பாளர்கள்) போய் கொண்டிருந்தாங்க. அவங்களுக்குகுப் பின்னாடி, பிரதமரின் பர்சனல் செகரட்டரி ஆர்.கே.தவான் வந்து கொண்டிருந்தார். அந்த பாதையோட ரைட் சைட் புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங் (சப் இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) ஆகியோர் நின்னுக்கிட்டு இருந்தாங்க.
இந்திரா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தபோது, திடீர்னு பியாந்த்சிங் தன்னோட கைத்துப்பாக்கியை உருவி எடுத்து, இந்திரா காந்தியை நோக்கி அஞ்சு தடவை சுட்டான். அதே சமயம் கூட இருந்த சத்வந்த்சிங் (26) மிஷின் கன்னாலே (ஸ்டேன்கன்) சரமாரியாகச் சுட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இதெல்லாம் நடந்து போச்சு.
இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்து ரத்தம் பீறிட அவர் கீழே சாய்ஞ்சார். (இந்திரா காந்தியை நோக்கி பியாந்த்சிங்கும், சத்வந்த்சிங்கும் திரும்பிய போது, இந்திராவின் பின்னால் வந்த மெய்க்காப்பாளர்கள் அதை கவனிக்கவே செய்தனர். ஆனால் அந்த இருவரும் இந்திரா காந்தியை நோக்கி வணங்குவதாகவே அவர்கள் நினைச்சிட்டாங்களாம்,.)
அப்பாலே பி எம் இந்திரா காந்தியை சுட்டுட்டஙக்ன்னு தெரிஞ்சதும்ம், கொலையாளிகளை நோக்கி கமாண்டோ படையினர் சுட்டனர். இதில் பியாந்த்சிங் ஸ்பாட் டெத் அடைந்தான். சத்வந்த்சிங் படுகாயம் அடைந்தான்.
அதே சமயம் வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த சோனியா துப்பாக்கி சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தவர். இந்திரா காந்தி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்டு "அம்மா!"ன்னு கதறினார். பொறகு இந்திரா காந்தியை ஆஸ்பத்திரிக்கு காரில் கொண்டு செல்ல பின் இருக்கையில் இந்திரா படுக்க வைக்கப்பட்டார். அவர் தலையை தன் மடி மீது வைத்துக்கொண்டார் சோனியா.
ஆஸ்பத்திரியில் இந்திராவுக்கு அவசர "ஆபரேஷன்" நடந்துச்சு. இந்திரா உடலில் 22 குண்டுகள் பாய்ந்திருச்சு. அவற்றில் 8 குண்டுகள் உடம்பைத் துளைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தன. இந்திராவைக் காப்பாற்ற டாக்டர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் பலன் இல்லை. 2.25 மணிக்கு இந்திரா இறந்து விட்டார்" என்று டாக்டர்கள் அறிவித்தனர். எனினும் அகில இந்திய ரேடியோ மாலை 6 மணிக்குத்தான் இந்திராவின் மரணச்செய்தியை அறிவிச்சுது.
பி எம் இந்திரா கொல்லப்பட்ட போது, ஜனாதிபதி ஜெயில்சிங் வெளிநாட்டில் இருந்தார். ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக, மேற்கு வங்காளத்துக்குச் சென்றிருந்தார். மூத்த மந்திரியான பிரணாப் முகர்ஜியும் அவருடன் இருந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த காரை, ஒரு போலீஸ் ஜீப் வழி மறித்தது. "பிரதமர் வீëட்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. சுற்றுப் பயணத்தை நிறுத்திவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்புங்கள்" என்ற செய்தி ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே ராஜீவ் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் கல்கத்தாவுக்குச் சென்றனர்.
அங்கு "இந்தியன் ஏர்லைன்ஸ்" விமானம் ஒன்று தயாராக காத்துக்கொண்டிருந்தது. அதில் ரெண்டு பேரும் டெல்லிக்குப் பயணமானார்கள்.
மேடம் மரணத்தை தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கடும் கலவரம் மூண்டது. இந்தியா முழுவதும் அசாதாரண நிலை நிலவியது. ராஜீவ் காந்தி டெல்லிக்கு வந்ததும் இறுதி சடங்குகள் துவங்கின. இறுதி சடங்குகள் முடிந்து சிதைக்கு தீ முட்டப்பட்டது.
Comments