கண்ணீர் விட்ட தோனி மனைவி சாக்ஷி.. வெடித்து அழுத சிறுமிகள்
கண்ணீர் விட்ட தோனி மனைவி சாக்ஷி.. வெடித்து அழுத சிறுமிகள்.. ஆச்சரியமாக பார்த்த பாண்டிங்.. அதுதான் தல
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் தோனி களத்தில் நின்ற ஒவ்வொரு நொடியும் உணர்ச்சி மிகுந்தவராக காணப்பட்டார் அவரின் மனைவி சாக்ஷி.
ஸ்டேடியத்தில் இருந்த சில சிறுமிகள் சந்தோஷம் தாங்க முடியாமல் கதறி அழுது விட்டனர். இந்த உணர்ச்சி மிகு காட்சிகளை பார்த்ததும், இது சிஎஸ்கே டீமா அல்லது அன்பான குடும்பமா என்ற குழப்பம் பிற அணி ரசிகர்களுக்கு வந்து விட்டது.
ஸ்டேடியத்தில் இருந்த சில சிறுமிகள் சந்தோஷம் தாங்க முடியாமல் கதறி அழுது விட்டனர். இந்த உணர்ச்சி மிகு காட்சிகளை பார்த்ததும், இது சிஎஸ்கே டீமா அல்லது அன்பான குடும்பமா என்ற குழப்பம் பிற அணி ரசிகர்களுக்கு வந்து விட்டது.
சாக்ஷி அழுததற்கும், ரசிகர்கள், ரசிகைகள் கண்ணீர் விட்டதற்கும் ஒரே காரணம்தான். அது தோனி களமாடிய விதம். அரியணையை இழந்த மன்னன் மீண்டும் போரில் வென்று, சிம்மாசனத்தில் கெத்தாக, ஸ்டைலாக ஏறி அமரும்போது மகாராணிக்கு எந்த மனநிலை இருக்குமோ அந்த மனநிலை சாக்ஷியுடையது.
கடந்த சில போட்டிகளாக தோனி ஆடும் விதம் குறித்து பல முனைகளில் இருந்து எழுந்த விமர்சனங்களை பார்த்து ரொம்பவே உடைந்து போயிருந்தார் சாக்ஷி. அந்த ஆற்றாமையின் மொத்த அடைப்பும் உடைபட்டு நேற்று அவரது கண்களில் நீராக வெளியேறியது.கடந்த சில போட்டிகளாக சாக்ஷியும், மகள் ஜிவாவும் தவறாமல் பார்வையாளர் மாடத்திற்கு வந்து விடுவார்கள். ஜிவா எப்போதுமே கைகளை கூப்பி இறைவனை வேண்டிக்கொண்டே இருப்பார். ஆனால் கடந்த 3 போட்டிகளில் சிஎஸ்கே தோற்ற நிலையில் நேற்று முக்கிய போட்டியில் டெல்லியை எதிர்த்து களம் கண்டது
நேற்று தோனி அடித்த ஒவ்வொரு ஷாட்டின்போதும், அருகே இருந்த பெண்ணுடன் ஹை-பை செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார் சாக்ஷி. அப்போதே அவரது கண்கள் பனித்துதான் இருந்தன. வின்னிங் ஷாட்டை தோனி அடித்தபோது, மகள் ஜிவாவை அப்படியே கட்டிப் பிடித்து கண்கலங்கினார் சாக்ஷி.
சிஎஸ்கே குடும்பம்
இது ஒரு பக்கம் என்றால், மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ஜெர்சி அணிந்த சில ரசிக சிறுமிகள் கூட சந்தோஷத்தில் கண்ணீர் விட்டனர். இதனால் மைதானமே உணர்ச்சி பெருக்கோடு காணப்பட்டது. அவ்வளவு ஏன், டிவியில் பார்த்த பல ரசிகர், ரசிகைகளும் கூட கண்களில் வடிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டனர். சிஎஸ்கே அணிக்குதான் ட்விட்டரில் பிற அணிகளை விடவும் பாலோவர்கள் அதிகம். களத்திலும் அப்படித்தான். எங்கு பார்த்தாலும் மஞ்சள் கொடிகள் பறந்தபடி இருந்தன. இது ரசிகர்களா, அல்லது தோனியின் குடும்ப உறுப்பினர்களா என்ற குழப்பம் பிற அணிகளின் ரசிகர்களுக்கும், ஏன் ரிக்கி பாண்டிங்கிற்குமே வந்திருக்கும். அவரது முகத்தை வீடியோவில் காட்டியபோது அப்படித்தான் டெல்லி பயிற்சியாளர் பாண்டிங் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு காட்சிக்கு சாட்சியானது துபாய் சர்வதேச மைதானம்.
Comments