வினிகரில் ஊறவைத்த வெள்ளரிக்காய்! தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா?

 வினிகரில் ஊறவைத்த வெள்ளரிக்காய்! தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா? 



பொதுவாக ஒரு சில காய்கறிகள் பச்சையாகவே சாப்பிடும் வகையில் இருக்கின்றன. அப்படியான ஒரு காய் தான் வெள்ளரிக்காய். கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் வெள்ளரிக்காய் பல நோய்களை தீர்க்க கூடியது.


வெள்ளரிக்காயில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு சத்து, பாஸ்பர்ஸ், கந்தகம், சிலிகன், குளோரின், ஆகியவை உள்ளது. இதில் 95% நீர் சத்து உள்ளது. கெட்ட நச்சுபொருட்களை சிறுநீரகம் வழியாக வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.


அதுமட்டுமின்றி இதனை வினிகருடன் ஊறவைத்து ஊறுகாய் போல் சாப்பிவது உடலுக்கு பல அற்புத நன்மைகளை வழங்குகின்றது. அந்தவகையில்   தற்போது இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 


 ஊறுகாயில் சேர்க்கப்படும் வினிகரை தினசரி எடுத்துக் கொள்வது உங்களுடைய எடை இழப்புக்கு உதவி செய்யும் என கூறப்படுகிறது. எனவே இனி ஊறுகாய் செய்யும் போது மறக்காமல் வினிகர் சேர்ப்பது நல்லது. உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து எடை குறைய உதவி் செய்கிறது.


ஊறுகாய் பற்றிய மற்றொரு ஆய்வில் காரமில்லாமல் வினிகர் மட்டும் சேர்க்கப்பட்ட வெள்ளரிக்காய் ஊறுகாய் சாற்றை சாப்பிடுவது விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் தசைப்பிடிப்பை போக்க பயன்படுகிறது. எனவே நீங்கள் ஒரு விளையாட்டு வீரர் என்றால் ஊறுகாயையும் அதன் சாற்றையும் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம். 


வெள்ளரிக்காய் ஊறுகாயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இதில் விட்டமின் சி, விட்டமின் ஈ போன்றவை காணப்படுகிறது. இவை நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக காய்ச்சல் மற்றும் ஜலதோஷ தொல்லையை போக்க உதவுகிறது.


 பெண்களின் மாதவிடாய் காலங்களில் உங்களால் சரியாக சாப்பிட முடியவில்லை என்றாலோ அல்லது உணவின் சுவை தெரியா விட்டாலோ அதற்கு ஊறுகாய் மிகவும் சிறந்தது. ஊறுகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு உணவின் சுவையை அறிய உதவுகிறது.


வெள்ளரிக்காய் ஊறுகாயில் அதிக அளவில் விட்டமின் கே உள்ளது. வைட்டமின் டி சருமப் பிரச்சினைகளைத் தடுக்கும் வாய்ந்தது.  


வினிகரில் ஊறவைக்கப்பட்ட வெள்ளரிக்காயும் இரத்த உறைதலைத் தடுக்க உதவுகிறது. எனவே சிறு காயங்கள் இருந்தால் கூட ஏற்படும் இரத்த இழப்பை இது தடுக்கிறது.


ஆல்கஹால் போதையை குறைக்க வெள்ளரிக்காய் ஊறுகாய் சாறு உதவுகிறது. இதிலுள்ள அமிலத்தன்மை ஆல்கஹால் போதையை இறக்குகிறது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி