எல்லிஸ் ஆர். டங்கன்

 




கலிபோர்னியாவில் திரைப்படத்துறையை பற்றிய படிப்பு படிக்கும்போது, கல்லூரியில் டங்கனுடன் மாணிக்லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார். அவர் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கும் போது அவருக்கு துணையாக டங்கன் அவருக்கு துணையாக இருந்தார், அவர் முதன்முதலில் பணிபுரிந்த திரைப்படம் நந்தனார், இப்படத்தில் சில காட்சிகளை இவர் இயக்கினார். கல்கத்தாவில் படப்பிடிப்பின்போது டாண்டனை ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தை இயக்கித்தரும்படி கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் தனது அமெரிக்க நண்பரான எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களை இயக்குனராக்கிக்கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.

இவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த சதி லீலாவதி படத்தின் மூலம் தமிழ்ப்பட இயக்குனரானார். இப்படத்தில் தான் எம்.ஜி.ஆர் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்புகள் கிட்டின. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது ஆங்கிலம் அறிந்த உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் இனைந்து பணியாற்ற முடிந்தது. இரண்டாம் உலகப்போரின்போது ஆங்கிலேயர்களின் கொள்கைகளை பரப்பும் சில படங்களையும் இயக்கினார். எம். எஸ் சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தை இந்தியிலும் இயக்கினார்.
நெருக்கமான காதல் காட்சிகள் இவரை அமெரிக்க கலாச்சாரத்தை தமிழகத்தில் பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாக்கியது. ஆனால் புதிய ஓளியுத்தி, நவீன ஒப்பனை முறைகளையையும் இவரே தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் மந்திரிகுமாரி. இந்தப் படத்தை பற்றி நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை, தமிழ்த் திரையுலகில் தவிர்க்கமுடியாத சில படங்களில் இதுவும் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது. டங்கன் 1950 ஆம் ஆண்டு அமெரிக்கா திரும்பினார்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி