நைட்ஷேட்’ காய்கறிகளை பற்றி தெரியுமா..? அவற்றின் மருத்துவ குணங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்

 நைட்ஷேட்’ காய்கறிகளை பற்றி தெரியுமா..? அவற்றின் மருத்துவ குணங்களையும் தெரிந்துகொள்ளுங்கள் 





‘நைட்ஷேட்’ காய்கறிகள் அதிகம் சாப்பிட்டால் கீல்வாதம் வரும் என்ற கட்டுக்கதைகள் எங்கிலும் மூடநம்பிக்கை நிரம்பி இருக்கிறது. இது தவறு என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு சோலனேசியே என்ற லத்தீன் பெயர் இருக்கிறது. நைட்ஷேட் காய்கறிகள் என்றால் என்ன, அவற்றின் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.


தக்காளி, கத்திரிக்காய், மணி மிளகு மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் ‘நைட்ஷேட்’ காய்கறிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். நைட்ஷேட் காய்கறிகள் ‘ஆல்கலாய்டு’ என்ற நைட்ரஜனை கொண்டிருக்கிறது. இது ஒரு சேர்மம் ஆகும். நைட்ஷேட் காய்கறிகளின் இலைகள், தண்டுகள் போன்றவற்றில் இந்த சேர்மம் உள்ளது.


பெரும்பாலான நைட்ஷேட் காய்கறிகளில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இவை உடலில் நச்சுத்தன்மைகளை ஏற்படுத்துகிறது. இது ஆக்ஸிஜனேற்றத்தை உண்டாக்குகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தான் கத்திரிக்காயில் ஊதா நிறத்தை கொடுக்கிறது.


தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. மற்ற காய்கறிகளை போலவே நைட்ஷேட் காய்கறிகளும் உடலுக்கு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குகின்றது.


அபாயமான காய்கறிகளா?


இந்த நைட்ஷேட் காய்கறிகளைச் சுற்றி பல கட்டுக்கதைகள் உல வருகிறது. இது தீங்கு விளைவிக்கும் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பதால் உடலில் கீல்வாதம் போன்ற நோய்களை உருவாக்கும் என்று கூறுகிறார்கள். உருளைக்கிழங்கில் காணப்படும் ஆல்கலாய்டு ‘சோலனைன்’ ஆகும். இவற்றில் வெயில் படும்போது அவற்றை பச்சை நிறமாக மாற்றுகிறது.


அதிகப்படியான ப்ரோட்டினை உட்கொள்வது நல்லதா?


எனவே தான் உருளைக்கிழங்குகளில் பச்சை நிறம் காணப்பட்டால் அவற்றை சாப்பிடக்கூடாது என கூறுகிறார்கள். இவை உண்மையா என்று ஆராய்ந்து பார்த்தல் அது தவறு என்று தெரிகிறது. காய்கறிகள் எந்த வகையான நச்சுத்தன்மையையும் கொண்டிருப்பதில்லை. ஆனால் இவற்றை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ளாமல் இருப்பது நல்லது. மேலும் கத்திரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளில் குறைந்த அளவு ஆல்கலாய்டுகள் இருக்கலாம். ஆனால் இவை உடலுக்கு தீங்கினை விளைவிப்பதில்லை.


நைட்ஷேட் காய்கறிகளை சாப்பிடலாமா? வேண்டாமா? :


நைட்ஷேட் காய்கறிகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால், நைட்ஷேட் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் உடல் எந்த நைட்ஷேட் காய்கறிகளுக்கு ஒத்துவருமா அல்லது எதிர்வினை உண்டாக்குமா? என்பதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.


நைட்ஷேட் காய்கறி ஒவ்வாமை காரணமாக ஏற்படும் சில பொதுவான அறிகுறிகள் வீக்கம், படை நோய், கண்கள் அரிப்பு, குமட்டல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், மார்பில் மூச்சுத்திணறல் மற்றும் தோல் அழற்சி ஆகும். எனவே நோயாளிகள், மாத்திரை சாப்பிடுபவர்கள் , அறுவை சிகிச்சை செய்ய காத்திருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவரை கலந்தாலோசித்து பிறகு நைட்ஷேட் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்ததாகும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி