ஆர்.எஸ்.சிவாஜி

 ஆர்.எஸ்.சிவாஜி






இவரது இயற்பெயர் சிவாஜி சின்னமுத்து. இவர் அந்நாளைய பிரபல நடிகரும், பாசமலர், பாலாடை, அன்னை இல்லம், அன்பளிப்பு போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளருமான ’பூங்காவனம்’ எம்.ஆர்.சந்தானம் என்பவரது இளைய மகனும், பிரபல இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் இளைய சகோதரரும் ஆவார். இவர் தமிழ்ப் படங்களுடன் இந்தி, தெலுங்கு மொழிப் படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.
26.10.1956 இல் பிறந்தவர். கமலஹாசனின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், விக்ரம், அன்பே சிவம், குணா, ஹேராம், விருமாண்டி, சத்யா, கலைஞன், மகளிர் மட்டும், பம்மல் கே.சம்மந்தம், உன்னைப் போல் ஒருவன் படங்கள் தொடங்கி ஏராளமான கமலஹாசன் படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை, பல்கலைக் கழகத்தில் B.A. (Psychology) பட்டப்படிப்பில் முதல் தரத்தில் தரத்தில் தேர்ச்சி பெற்றவர். இவர் தமிழ்த் திரையுலகில் திரைக்கதை எழுத்தராகவும், உதவி இயக்குநராகவும் மற்றும் பல பிரிவுகளிலும் 30 வருட கால அனுபவம் பெற்றவர். சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவர் பேசிய “தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்” என்ற வசனம் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது.மீன் குழம்பும் மண் பானையும், வனமகன், சங்கிலி புங்கிலி கதவத்தொற போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவருடன் பிறந்தவர்கள் காந்திராஜ், சந்தான பாரதி ஆகியோர்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி