முதுகு வலியைத் தடுக்க சில நச் வழிகள்.

 



முதுகு வலியைத் தடுக்க சில நச் வழிகள்.


முதுகு வலி என்பது, குறிப்பாக கீழ் முதுகு வலி இந்தியாவில் பரவலாக உள்ளது. வயதானவர்களுக்கு மட்டும் இந்த நோய் பாதிப்பு வரும் என்ற புரிதல் தவறானது.



இளைஞர்கள் மத்தியிலும் கீழ் முதுகு வலி என்பது அதிகரித்து வருகிறது. கணிணி முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருத்தல், உட்கார்ந்த நிலையில் இருக்கும் வேலைகளை செய்பவர்களுக்கு, முதுகு வலி பிரச்சனை இருக்கிறது. இந்த வேலைகளை செய்பவர்களின் முதுகெலும்பு டிஸ்க்குகள், பின்புற தசைகள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால், நீண்டகால சிக்கல்கள் உருவாகின்றன. முதுகெலும்பு தினமான இன்று, முதுகு வலியை தடுப்பது குறித்த ஆரோக்கியமான சில டிப்ஸ்களை தெரிந்து கொள்வோம்.


நல்ல நிலை:


கம்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள், பொதுவாக எளிதில் சோர்வடைகிறார்கள். உட்கார்ந்த நிலையில் வேலை செய்யும் அவர்களுக்கு முதுகெலும்பு மற்றும் முதுகெலும்பு தசைகளின் மீது ஏற்படும் அழுத்தம் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அதிக வலியை உண்டாக்குகிறது. அதிகம் மொபைல் போன் பயன்படுத்துபவர்களும், கழுத்துப் பகுதியை வளைத்து, முதுகெலும்புக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கின்றனர். இதனால் அவர்களுக்கும் வலி உண்டாகிறது. இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்றால், நேராக நிமிர்ந்த நிலையில், முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் கொடுக்காத வகையில் அமர்ந்து கொள்ள வேண்டும்.


இடைவெளி:


ஒரே நிலையில் அமர்ந்தவாறு பணியாற்றும் சூழலில் இருப்பவர்கள், அடிக்கடி இடைவெளி எடுத்துக் கொள்வது நல்லது. மன அழுத்ததைக் குறைப்பது மட்டுமல்லாமல், முதுகெலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தங்களும் குறையும். இடைவெளி எடுத்துக் கொள்ளும் நேரங்களில் கை, கால் மற்றும் இடுப்பு பகுதிகளுக்கான சாதாரண உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இல்லையென்றால், அசாதாரண உடல் பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.


உடற்பயிற்சி - யோகாசனம்:


உடற்பயிற்சி செய்யும்போது தசைகள் மற்றும் மூட்டு, முதுகெலும்பு டிஸ்குகளுக்கான திரவத்தை எடுத்துக்கொள்ள உதவுகிறது. முறையாக செய்தால் முதுகு வலி குறையும். கழுத்து, முதுகு, தசை சுருக்கம், தொடை எலும்பு பகுதிகள் முதல் மார்பு வரை இறுக்கமான தன்மை அல்லாமல், இலகுவான நிலை கிடைக்கும். தசை சுருக்கங்கள் சரியாகும்போது, தேவையற்ற வலிகள் உண்டாகாது. யோகாசனங்களைப் பொறுத்த வரை ஸ்வனாசனா, சலபாசனா, மார்ஜர்யாசனா, திரிகோணாசனா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.



நடைப்பயிற்சி:


முதுகுவலி மற்றும் முதுகெலும்பின் வலியைத் தணிக்க வழக்கமான நடைப் பயிற்சிகளை மேற்கொண்டால் போதும். உட்கார்ந்த நிலையில் தொடர்ந்து வேலை செய்யும்போது இடும்பு, முதுகெலும்பு தசைகள் பலவீனமடைகின்றன. நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலுக்கு தேவையான ரத்த ஓட்டம் அனைத்து பகுதிகளுக்கும் சீராக எடுத்துச் செல்லப்படுகிறது. . மேலும், ரத்தத்தில் செல்லும் ஆக்சிஜன் மற்றும் ஊட்டசத்துக்களின் அளவும் கூடுகிறது. இவை தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுத்து வலியைக் குறைக்கிறது.


உணவு முறை:


முதுகு வலி மற்றும் தசை வலி இருப்பவர்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால், கொழுப்பு உணவுகள், உடல் எடையைக் கூட்டி, தசை எலும்புகளில் அழுத்தத்தை அதிகரிக்க காரணமாக அமைகின்றன. மேலும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், குறைந்த கொழுப்பு நிறைந்த உணவுகள், கால்சியம் ஊட்டச்சத்து, அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த உணவு, புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி