அழுகை அறைக்கு வரவேற்கிறோம்
கவலை மற்றும் மன நல பிரச்னைகள் உள்ளவர்களுக்காகவும், துயரைச் சொல்லி அழுது ஆறுதல் அடைய ஆள் இன்றி தவிப்பவர்களுக்காகவும் ஸ்பெயினில் தனி அறையை உருவாக்கி உள்ளனர். 'அழுகை அறைக்கு வரவேற்கிறோம்' என, வினோத வாசகத்துடன் வரவேற்கிறது, ஸ்பெயினின் மாட்ரிக் நகரில் அமைந்துள்ள அந்த அழுகை அறை. மனநல பிரச்சனையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த அறையில் உளவியல் மருத்துவர் உட்பட மனச்சோர்வடையும் போது அழைக்கக்கூடிய நபர்களின் பெயர்களுடன் தொலைபேசிகள் உள்ளன. அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பு. மனதில் கவலை உள்ள பலரும் இந்த அறைக்கு வந்து அழுது ஆறுதல் தேடுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் இந்த அழுகை அறைக்கு வரவேற்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments