நடிகர் சத்யராஜ் பிறந்த நாள் இன்று

 நடிகர் சத்யராஜ் பிறந்த நாள் இன்று

சத்யராஜ் கோவை மாவட்டத்தில் பிறந்த ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா. இவர் வில்லன் நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி, பின் கதாநாயகன் நடிகராக மாறி நடித்து வருகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சிபிராஜ் இவரது மகன். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர் மேலும் இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நன்பர் ஆவார்.
சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காக பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். இதில் இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். சத்யராஜ் ஒரு நடிகரும் ஒரு நாத்திகரும் ஆவார்.
சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் கல்லூரி என்பதால் ஒரு நெருங்கிய நட்பு பகிர்வு மற்றும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களில் அடிக்கடி சேர்ந்து நடித்தனர். மணிவண்ணன் மற்றும் சத்யராஜ் ஒன்றாக 1987 ல் இருந்து 1994 வரை தொடங்கி தொடர்ச்சியாக 12 வெற்றி படங்களில் சேர்ந்து நடித்தனர்.
1978 -ம் ஆண்டு தொடங்கிய அவரது கலை பயணம் இன்று வரை சிறப்பாக சென்றுகொண்டிக்கிறது.
1987 இல் சத்யராஜூம், அவருடைய மனைவியும் சத்யராஜின் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரை பத்திரிக்கை வைத்து அழைத்தனர். அதன்படி எம்.ஜி.ஆரும் தன் துணைவியாருடனும் அமைச்சர் முத்துசாமியுடனும் சென்றார். அப்போது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் என்பதால் திரை உலகத்தினரும் மகிழ்ந்தார்கள். அதன்பின் திருமணத்திற்கு வந்தமைக்கு எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்ல சென்ற போது எம்.ஜி.ஆர் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையை பரிசாக கேட்டு வாங்கிக் கொண்டார் சத்யராஜ்.
May be an image of 1 person and beard
artcle1

article:kandasamy .r

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி