இந்தியாவில் முத்திரைத்தாள்
இந்தியாவில் முத்திரைத்தாள் என்றால் என்ன...?
முத்திரைத் தாள்கள் என்பது சொத்துக்கள் பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை முத்திரைத் தாள்களாக நாம் வாங்கி அதில் விற்பனை, தானம், செட்டில்மெண்ட் போன்ற பத்திரங்களை அந்த நாளில் எழுத்தி கையொப்பமிட்டு, பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய கொடுக்கப்படும் காகிதத்தை முத்திரைத்தாள் என்கிறோம்.
முத்திரை வரி என்றால் என்ன...?
நீங்கள் ஒரு புதிய சொத்து வாங்குகிறீர்கள் எனில் முத்திரை வரி எனப்படும் கட்டணத்தை செலுத்த வேண்டும், இது மாநில அரசாங்கத்தால் விதிக்கப்படும்.
உங்கள் பெயரில் உங்கள் சொத்து பதிவுகளை சரிபார்க்க இந்த கட்டணம் பயன்படுத்தப்படுகிறது, மேலும் உங்கள் சொத்து உரிமை ஆவணத்தை சட்டப்பூர்வம் ஆக்குகிறது. சொத்து பதிவு ஆவணத்தை முத்திரை கட்டணம் செலுத்தாமல் வாங்கினால் சட்ட உரிமையாளராக நீங்கள் ஆவது கேள்விக்குறியது ஆகும்.
இந்தியாவில் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம் எப்படி கணக்கிடப்படுகிறது...?
முத்திரை வரி செலவு என்பது பொதுவாக சொத்து மதிப்பின் 5-7% ஆகும். சொத்துக்களின் சந்தை மதிப்பின் 1% பதிவு கட்டணம் இருக்கும். எனவே, இந்த கட்டணங்கள் பல லட்சங்கள் ஆகும். நீங்கள் வீட்டை வாங்கி பெயரில் சொத்துக்களை பதிவு செய்யும்போது பற்றாக்குறையை தவிர்க்க, நீங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பிக்கும்போது நீங்கள் முத்திரை கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்திற்கான வேண்டுகோளை உறுதிப்படுத்தவும்.
நீங்கள் செலுத்த வேண்டிய முத்திரை வரியின் சரியான அளவை தீர்மானிக்கும் பல காரணிகள் உள்ளன. அவைகள் :-
• சொத்தின் சந்தை மதிப்பு
• சொத்து வகை, மாடிகளின் எண்ணிக்கையுடன்
• சொத்தின் பயன்பாட்டு நோக்கம், குடியிருப்பு அல்லது வணிகம்
• சொத்து அமைவிடம்
• சொத்து உரிமையாளரின் வயது மற்றும் பாலினம்
முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்கள் வீட்டுக் கடனில் சேர்க்கப்பட்டதா...?
விதிப்படி, அனுமதிக்கப்பட்ட வீட்டுக் கடன் தொகை உடன் முத்திரை கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் கடன் அளிப்பவரால் சேர்க்கப்படவில்லை. இதை வாங்குபவர் தனது சொந்த செலவில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அசல் மற்றும் போலி முத்திரைத்தாளின் வித்தியாசங்கள்...!
1. அசல் : கருவூல உலோக முத்திரையுடன் தேதியுடன் இடப்பட்டு இருக்கும்.
போலி : பெரும்பாலும் இரப்பர் ஸ்டாம்ப் இடப்பட்டு இருக்கும்.
2. அசல் : அச்சு பதிப்பு பளிச்சென்றும், நேர்த்தியாக இருக்கும்.
போலி : பளிச்சென்று இருக்காது.
3. அசல் : முத்திரை தாளின் தரம் மேம்பட்டதாக இருக்கும்.
போலி : தாமற்ற BOND பேப்பரில் கூட அச்சிடப்பட்டு இருக்கும்.
4. அசல் : அசோக சக்கரம் வாட்டர் மார்க் இமேஜ் இரண்டு புறமும் உள்ளீடாக தெளிவாக தெரியும்.
போலி : வாட்டர் மார்க் இமேஜ் தெரியாது அசோக சக்கரம் உள்ளீடாக தெரியாது.
5. அசல் : புற ஊதா கதிரில் ஒளியில் பார்த்தால் பாதுகாப்பு அம்சங்கள் தெரியும்.
போலி : புற ஊதா கதிரில் பார்த்தால் எதுவும் தெரிவதில்லை
6. அசல் : இழைகளால் தயாரித்தால் சாதரணமாக கிழியாது.
போலி : வைக்கோல், மரக்கூழில், தயாரிதத்தால் எளிதாக கிழியும்.
பத்திரப்பதிவு செய்யும் முறை :-
முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்களைத் தட்டச்சு செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையெழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காகத் தாக்கல் செய்ய வேண்டும்.
சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.
பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.
பத்திர பதிவிற்கு பணம் செலுத்தும் முறை :-
நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில் அமைந்திருக்கலாம்.
ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்குப் பெயர் Guide line value.
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்தப் பெயர் Guide line value-க்கு, 8% தொகைக்கு முத்திரைத் தாள்களாக வாங்கி, அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்களைத் தட்டச்சு செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.
செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் வரைவோலையாகச் (DEMAND DRAFT) செலுத்த வேண்டும்.
இதற்கு, 41 என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களைப் பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் வரைவோலையாகச் (Demand Draft) செலுத்த வேண்டும் வரைவோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.
பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து 1% தொகை மற்றும் கணினிக் கட்டணம் ரூபாய் 100 ஆகியவற்றைப் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் வரைவோலையாகவும் செலுத்த வேண்டும்.
முத்திரைத்தாள் தொடர்பான விதிமுறைகள் :-
கட்டணத்தை முழுமையாக செலுத்தவேண்டும்.
தவறினால், பாக்கி தொகையின் மீது அபராதம் விதிக்கப்படும்.
சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். தாமதமாக கட்டலாம். ஆனால் அபராதம் செலுத்த நேரிடும்.
முத்திரைத்தாள் செலுத்தப்பட்ட ஆவணம் சட்டப்பூர்வ ஆவணமாக (Legally Valid Document) கருதப்படும்
இவற்றை நீதிமன்றத்தில் ஆதாரமாக பயன்படுத்தலாம்
(உதா: பிராமிஸரி நோட்)
சொத்து விஷயத்தில் வாங்குபவரே கட்டணத்தை செலுத்தவேண்டும்.
சொத்து பரஸ்பர மாற்றம் (Exchange) செய்யும் போது, வாங்குபவரும் விற்பவரும் சரிசமமாக கட்டணத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
சொத்துக்களை வாங்குபவர் அல்லது விற்பவர் பெயரில் மட்டுமே முத்திரைத்தாள்களை வாங்க வேண்டும்.
வாங்கிய 6 மாதங்களுக்குள் உபயோகித்துவிடவேண்டும்
முத்திரை தாள் கட்டணத்தை குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியாது.
கிரைய பத்திரத்தை முழுவதும் வெள்ளை தாளில் எழுதி, முத்திரை தீர்வை பணமாகவும் செலுத்தலாம்.
பத்திரப்பதிவில் தேவையான தகவல்கள் இல்லை, தவறு இருக்கிறதென்று பதிவாளர் கருதினால் அவர் ஆவணத்தை பதிய மறுத்துவிடலாம்.
வீடு இருக்கும் பகுதி, கட்டப்பட்ட ஆண்டு, அடுக்குகளின் எண்ணிக்கை போன்ற தகவல்களை சரியாக குறிப்பிட வேண்டும்.
பாகப்பிரிவினை பத்திரம், அடமானப்பத்திரம், விற்பனை சான்றிதழ், பரிசு பத்திரம், பரிமாற்றப் பத்திரம், குத்தகை பத்திரம், உரிம ஒப்பந்தம் போன்ற அனைத்து தேவையான ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும்.
உயில் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட சொத்துக்களை தவிர்த்து மற்ற அனைத்து அசையா சொத்து பரிமாற்றத்திற்கும் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கூட்டுறவு வீட்டுவசதி வங்கி மூலம் விற்கப்படும் சொத்துக்களுக்கு கட்டணம் இல்லை.
சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு சொத்துக்களை மாற்றும் போதும் , சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப ஒரு கட்டணம் செலுத்த வேண்டும்.
முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தாமல் சொத்துரிமை மாற்றம் செய்வது
எப்படி...?
பணம் பெற்றுக்கொண்டு சொத்துரிமையை மாற்றம் செய்தால் அது சொத்து விற்பனை. தானப் பத்திரம் மூலம் சொத்துரிமையை மாற்றுவது விற்பனையல்ல.
குடும்ப உறவுகளுக்குள் தானமாக வழங்குவதாக பத்திரத்தில் பதிவு செய்வதை தான செட்டில்மென்ட் என்று சொல்லுவார்கள்.
தானமாக பதிவுசெய்யும்போது முத்திரைத்தாள் கட்டணம் இல்லை. ஆனால், தான பத்திரம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். சொத்து வழிகாட்டி மதிப்பில் 1% அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்.
முக்கிய தகவல்: தானம் வாங்குபவர் தானம் கொடுத்த சொத்தை ஏற்று உடனடியாக சுவாதீனத்தை அடைந்து கொள்ளுங்கள். அந்த இடத்தின் வருவாய் ஆவணங்கள், பிற ஆவணங்களையும் உடனடியாக தனது பெயருக்கு மாற்றி விடுதல் நல்லது.
முத்திரைத்தாள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்...!
1. முத்திரைத் தாள்கள் என்பது சொத்துக்கள் பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை முத்திரைத் தாள்களாக நாம் வாங்கி அதில் விற்பனை, தானம், செட்டில்மெண்ட் போன்ற பத்திரங்களை அந்த நாளில் எழுத்தி கையொப்பமிட்டு, பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய கொடுக்கிறோம்.
2. இந்திய முத்திரைத்தாள்கள் சட்டம் 1899 என்ற சட்டம் மேற்படி முத்திரை தாள்கள் அதன் நடவடிக்கைகளை ஏற்படுத்துகிறது.
3. முத்திரைத் தாள்கள் & முத்திரை ஸ்டாம்கள் மூலமாக அரசு தங்களுடைய வரியை வசூலிக்கின்றன.
4. அஞ்சல்துறை தவிர்த்த ஸ்டாம்களை முத்திரைதாள் ஸ்டாம்ப்போடு எக்காரணம் கொண்டும் குழப்பி கொள்ள கூடாது.
5. முத்திரைத்தாள் & ஸ்டாம்கள் இந்தியாவில் நாசிக் & ஹைதராபாத்தில் மட்டும் அச்சிட்டு இந்தியா முழுவதும் சப்ளை அனுப்பபடுகிறது.
6. தமிழகத்தில் இவை கருவூலம், சார் கருவூலம் வழியாக முத்திரைதாள் விற்பனையாளர்கள் மூலமாக பொது மக்கள் கையில் தவழ்கிறது.
7. முத்திரைத்தாள் A4 Size அகலமும் , Fullsape பேப்பருக்கு கொஞ்சம் குறைவான உயரத்தில் , 3 ல் ஒரு பங்கில் இந்திய அரசு முத்திரை அச்சிடப்படும். 2 பங்கு நாம் நம்முடைய கிரைய விவரங்களை எழுதுவதற்காக வைத்து இருப்பர்.
8. முத்திரைத்தாள் Judicial & Non Judicial என்று இரண்டு வைகைப்படும்.
9. ஜுடிசியல் முத்திரைத்தாள்கள் நீதித்துறைக்கு உள்ளே சொத்து வழக்குகள் உயர்நீதிமன்ற வழக்குகளுக்கு பயன்படுபவை.
10. Non Judicial முத்திரைத்தாள்கள் என்பது நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரபதிவு அலுவலகம் , இன்சூரன்ஸ் அக்ரீமென்ட் போன்றவைகளுக்கு பயன்படுபவை.
11. Court fee stamp, Revenue Stamp, Notorial Stamp, special adhesive stamp, foreign bill Stamp, broker’s note, Insurance Policy Stamp, Share Transfer Stamp போன்ற முத்திரைவில்லைகள், ஆவண உருவாக்கம் & பரிமாற்றங்கள், ஒப்பந்தங்களுக்கு பயன்படுகின்றன.
12. முத்திரைத்தாள் சொத்து கைமாறுவதற்கு, ஷேர்களுக்கு, வியாபார பார்ட்னர்ஷிப் பத்திரங்களுக்ககு, பில் ஆப் எக்ஸேஜ், வாடகை , பிராமிசரி நோட் போன்ற அசையும் & அசையா சொத்துகளுக்கு பயன்படுத்தபடுகின்றன .
13. மேலும் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம், தான பத்திரம், குத்தகை வாடகை, முதலீடு அதிகப்படுத்துதல், அக்ரீமென்ட் ஆப் பேங்க் கேரண்டி, வீட்டு கடன், கடன் ஒப்பந்தம், அடமானம் போன்ற வற்றிற்கும் முத்திரைதாள்கள் பயன்படுத்தபடுகின்றன.
14. முத்திரைத்தாள் மதிப்பு சிலவற்றிற்கு Fixed ஆக இருக்கும் அவை adoption deed, affidavit, article of association , cancellation deed, copy of Extracts, Indemnity Bond, Power attiring, divorce .
15. முத்திரைத்தாள் மதிப்பு நாம் பத்திரத்தில் காட்டுகின்ற பரிமாற்ற தொகையினை பொறுத்து அமையும், அவை அடமானம், குத்தகை ஒத்தி, ஹைப்போதிகேசன் டீட், ஆர்ட்டிகிள் ஆப் அச்சோலியேசன் போன்றவை.
16. முத்திரைதாள்கள் மதிப்பு நாம் பத்திரத்தில் காட்டுகின்ற மதிப்பு அல்லது உண்மையான சந்தை மதிப்பு, இரண்டில் எது அதிகமோ அதனை காட்டுவது கிரைய ஒப்பந்தம், கிரையம் பரிமாற்றம் , பாகபிரிவினை போன்ற பத்திரங்கள் இப்படி நடக்கின்றன.
17. முத்திரைத்தாள்களில் எழுதப்பட்டு அதனை பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டால் அந்த முத்திரைத் தாள்களுக்கு காலம் முழுவதும் மதிப்பு இருக்கிறது.
18. முத்திரைத்தாள்கள் வாங்கப்பட்டு அதனை எழுதாமலும், பத்திரப்பதிவு நடக்காமல் இருந்தால் அவை ஆறுமாதம் தான் செல்லும்.
19. சொத்து வாங்கும்போது முத்திரைத்தாள் மதிப்பு சந்தை மதிப்பு விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை குறைக்க முத்திரைத்தாள் சட்டம் 47 (A) ன் கீழ் மனு செய்யலாம்.
20. வீணாக்கப்பட்ட முத்திரைத்தாள், பயன்படுத்தப்படாத முத்திரைத் தாள்களை அரசிடம் கொடுத்து Refund வாங்கலாம்.
21. மும்பையை சேர்ந்த தெல்கி என்பவரின் அதிக அளவு போலி முத்திரைத்தாள்களை உருவாக்கி இந்தியா முழுவதும் மோசடி செய்தான்.
22. தெல்கி விளைவுக்கு பிறகு, முத்திரைத்தாள் ஒரிஜினாலா, போலியா என அதிக அளவு சோதனையிட ஆரம்பித்தனர்.
23. பிராங்கிங், E.Stamp, ESBTR ( secular bank & treasury receipt ) போன்ற புதிய வழிகள் Non Judicial முத்திரைத்தாள்களுக்கு மாற்றாக உருவாகி இருக்கிறது.
24. ESBTR என்பது வங்கியில் முத்திரைத்தாள்களை கட்டி விட்டால் அவர்கள் Printed Electronic Stamp தருவார்கள். தற்போது தமிழகத்தில் இவை இல்லை. மும்பை, டெல்லி பகுதிகளில் இவை நடைமுறையில் இருக்கிறது.
25. பிராங்கிங் ( Franking) என்பது நாம் பணம் கட்டிய பிறகு, நாம் எழுதிவைத்து இருக்கிற பத்திரத்தில் முத்திரைத் தீர்வையை Frank செய்து தருவார்கள்.
26. E Stamp என்பது அரசு சில தனியார் நிறுவனங்களை இதற்கு நியமித்து இருக்கிறது. தமிழகத்தின் பெருநகரங்களில் E- Stamp நாம் கட்டிய தொகைக்கு தருகிறார்கள்.
27. புதிய முறைகள் முத்திரைதாளில் வந்தாலும், பழைய முத்திரைத்தாளுக்கு இருக்கும் உணர்வு ரீதியான மதிப்பு புதியமுறைகளுக்கு இன்னும் ஏற்படவில்லை.
28. அதிக மதிப்பிலான முத்திரைத்தாள்கள் வாங்கும்போது அரசு கருவூலத்திலே நேரடியாக சென்று வாங்கலாம் இதனால் கமிஷன் இருக்ககாது. பணம் மிச்சம்.
29. கிரையப்பத்திரத்திற்கு , முழுவதும் வெள்ளை தாளில் எழுதி, முத்திரை தீர்வை பணமாக கூட கட்டலாம்.
30. ரெவின்யு ஸ்டாம்ப், Court Fee Stamp, போன்ற முத்திரை வில்லைகளை எப்பொழுதும் கையிருப்பில் வைத்து கொள்வது நல்லது. அவசர நேரத்தில் நிச்சயம் உங்களுடைய டாகுமென்ட் (அ) இன்ஸ்ருமெண்டையோ லீகல் ஆக்க உதவுகிறது.
Comments