அண்ணாமலைக்கு நோட்டீஸ்- ரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரும் பி.ஜி.ஆர். நிறுவனம்!

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ்- ரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரும் பி.ஜி.ஆர். நிறுவனம்!


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரூ500 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று பி.ஜி.ஆர். எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அண்ணாமலை, நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்மையில் சில குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். மேலும் மின்சார கொள்முதலில் ஊழல் நடப்பதாகவும் கூறியிருந்தார்.

பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி இதனை மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை இதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும் கோபாலபுரம் பிஜிஆர் எனர்ஜி மின்சார அமைச்சகம் செந்தில் பாலாஜி இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்... விடை எளிதில் புரியும் எனவும் ட்விட்டரில் அண்ணாமலை பதிவிட்டிருந்தார். அவரது இந்த தொடர் பதிவுகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் பதிலடி கொடுத்து வந்தார்.

இந்நிலையில் பிஜிஆர் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தினேஷ்குமார் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீஸில் பிஜிஆர் நிறுவனம் தொடர்பாக ஆதாரங்கள் இல்லாமல் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆகையால் பிஜிஆர் நிறுவனத்துக்கு ரூ500 கோடி நட்ட ஈடு தர வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த வக்கீல் நோட்டீஸை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அண்ணாமலை.

மேலும் சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள் - நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது! சந்திப்போம்! என பதிவிட்டிருக்கிறார். அண்ணாமலையில் நான் ஒரு சாதாரண விவசாயி என்ற இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அண்ணாமலை சொத்து விவரம் அண்ணாமலையின் வேட்புமனு தாக்கலின் போது கொடுக்கப்பட்ட சொத்து விவர நகல்களும் ஷேர் செய்யப்பட்டு இதுதான் ஒரு சாதாரண விவசாயியின் வருமானமா? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. திமுக எம்.பி. செந்தில்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில், என்ன ஒண்ணுமே புரியல - இப்போ தான் மேல கைய வைச்சு பாரு வட்டியும் முதலும்மா திருப்பி கொடுப்போம் என்று சொல்லிட்டு வழக்கு போட போறாங்க என்றதும் சாதாரண விவசாயியா மாறிடறாங்க. பாவம் இதுல அவர் வளர்க்கும் ஆடுகள் வேற ஏன் சமந்தம் இல்லாம உள்ளே இழுத்து விடுறாங்க என கிண்டலடித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி