இரும்பு மனுஷி இந்திரா காந்தி
இன்றைய - அன்றைய ரிப்போர்ட்; நம்ம கவர்மென்டாலே ‘மகாத்மா’ என்பதை உறுதிப்படுத்தாத (இது தனி ஸ்டோரி) காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பொறகு, நம்ம இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான அல்லது அதிர்ச்சியான நிகழ்ச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சிதான். ஆமாம்.. கிட்டத்தட்ட 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் செக்யூரிட்டிகளாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார். அதாவது சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா மீது சீக்கியர்களில் பலர் ரொம்ப ஆத்திரமா இருந்தாங்க. அதன் காரணமா, பி எம் இந்திரா காந்தியின் வூட்டிலே காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்த வேண்டாமுன்னு என்று இண்டெலிஜென்ஸ் டைரக்டர் கருத்து தெரிவித்தார். ஆனாக்க அந்த யோசனையை இந்திராகாந்தி ஏத்துகலை. டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியோட வூடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த ரெண்டு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் இருந்துச்சு. இந்த வூட்டை அடுத்த பில்டிங், பிரதமரின் அலுவலகம...