தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்
சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பொது மக்கள் பார்வைக்காக முதலமைச்சர் துவக்கி வைத்தார்: அருங்காட்சியகத்தை வரும் 30-ம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். அதே சமயம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு அனுமதிக் கட்டணம் இல்லை.. ஆனால் ஏனையோரிடம் அக்டோபர் 1 முதல் நுழைவுக்கட்டணம் ரூ.5 வசூலிக்கப்படும்.
அது சரி இக்காட்சியகத்தில் என்னெ ஸ்பெஷல்? இதோ கட்டிங் கண்ணையா ஸ்பெஷல் ரிப்போர்ட்
பிரிட்டிஷ் ஆட்சியின் சான்றாக சென்னையில் இருக்கும் கட்டடங்களில் எழுப்பூர் காவல் ஆணையர் அலுவலக கட்டடமும் ஒன்று. 1856 முதல் 2013 வரை காவல் ஆணையர் அலுவலகம் இங்குதான் செயல்பட்டு வந்துச்சு.
173 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம்தான் 5 கோடி ரூபாய் நிதியில் இப்போ காவல்துறை அருங்காட்சியமாக மாற்றப்பட்டிருக்குதுது.
இங்கு 1856இல் காவல் ஆணையராக இருந்த போல்டர்சன் தொடங்கி 2016 வரை காவல் ஆணையராக இருந்தவர்களின் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்குது.
1870இல் போலீசார் பயன்படுத்திய சீமை வண்டி எனப்படும் சைக்கிள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1982இல் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், புல்லட், சென்னை மாநகர காவலுக்காக வாங்கப்பட்ட குண்டு துளைக்காத கார், மெரினா கடற்கரையில் பயன்படுத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் இங்கு உள்ளன.
தமிழக காவல்துறையின் தொடக்க கால சீருடைகள், வரலாற்று சிறப்பு மிக்க செய்தி தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்தி எதிர்ப்பு போராட்டம், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சென்னையில் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீரப்பன் கைது உள்ளிட்ட புகைப்படங்கள் உள்ளன.
மேலும், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், விடுதலைப்புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிறு பீரங்கி, சாமானியர்கள் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி ரகங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
Comments