சூரியகாந்தி விதைகளின் அசரவைக்கும் நன்மைகள்..!

 உடல் நலன் முதல் சரும நலன் வரை… சூரியகாந்தி விதைகளின் அசரவைக்கும் நன்மைகள்..! 





💚❤️


தினமும் உணவில் ஏதோ ஒரு வகையில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவு பொருட்களில் சூரியகாந்தி விதைகளும் ஒன்று. காலை உணவுகளில், சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம். சூரியகாந்தி விதைகளில் நிறைய ஊட்டச்சத்துகள், அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் சுமார் 30 கிராம் அல்லது சிறிதளவு சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது போதுமானது. சூரியகாந்தி விதைகளை நீங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, உங்கள் தோல் மற்றும் முடியையும் மேம்படுத்துகிறது. சூரியகாந்தி விதைகள் உங்கள் கூந்தல் மற்றும் சரும அழகை எவ்வாறு பாதுகாக்கிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.


முகப்பரு மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்:


சூரியகாந்தி விதைகள் கொழுப்பு மற்றும் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற சேதத்தை எதிர்த்துப் போராடவும், உங்கள் சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த விதைகளில் உள்ள மெக்னீசியம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி முகப்பரு ஏற்படுவதை தடுக்கிறது.


நச்சு தன்மையை நீக்கும்:


சூரியகாந்தி விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. மேலும் சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாப்பதில் சூரியகாந்தி விதைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இது அடைபட்ட சரும துளைகளை திறந்து சருமத்தில் இருக்கும் அசுத்தங்களை அகற்ற உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் பிரகாசமான தோற்றத்தை பெறுகிறது.


முடி உதிர்தலை தடுக்கும்:


சூரியகாந்தி விதைகள் முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுவதற்கும், முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் துணை புரிகிறது. சூரியகாந்தி விதைகளில் காமா-லினோலெனிக் அமிலம் எனப்படும் ஒரு தனித்துவமான மூலப்பொருள் உள்ளது. இது மயிர்கால்களை வலுப்படுத்துகிறது. இது பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்கிறது மற்றும் வலுவான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.


இயற்கை மாய்ஸ்சரைசர்:


சூரியகாந்தி விதைகளிலிருந்து பெறப்படும் சூரியகாந்தி எண்ணெய், இயற்கை கொழுப்புகளின் வளமான மூலமாகும். இது உங்கள் சருமத்தில் இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதனால் வறட்சியடைந்த உங்கள் சருமம் புத்துணர்ச்சி பெறும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி