கார்த்திக்
ஹேப்பி பர்த் டே கார்த்திக்
நடிகர் முத்துராமனின் மகன் என்று அறிமுகமாவர்தான். ஆனால் கொஞ்ச காலத்தில் ‘கார்த்திக் அப்பா யாரு தெரியும்ல. நடிகர் முத்துராமன்’ என்று சொல்லும் அளவுக்கு, தனித்துத் தெரிஞ்சார்.., தெரிகிறார்..
இத்தனைக்கும் ‘நடிக்க வந்தது விபத்து’ அப்ப்டீன்னு சில பேர் பேட்டி கொடுப்பது வாடிக்கை. உண்மையில், ஒரு விபத்தில்தான் இயக்குநர் பாரதிராஜாவின் கண்ணில் பட்டார் முரளி. ஆமாம்... கார்த்திக்கின் நிஜப் பெயர் முரளி.
இயக்குநர் பாரதிராஜா காரில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே சைக்கிளில் வந்த சிறுவன் காரில் மோதி லேசாக சிராய்த்துக்கொண்டான். உடனடியா அவனை தன் காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பாரதிராஜா மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அப்போ பக்கத்தில் உள்ள வீட்டு போர்டிகோ பகுதியில், விளையாடிக்கொண்டிருந்த பையனைப் பார்த்தார். அதுவரை, அடுத்தநாள் ஷூட்டிங் செல்லவேண்டிய அவரின் அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு நாயகன் மட்டுமே கிடைக்கவில்லை. பையனைப் பார்த்ததும் உற்சாகமானார். ‘முத்துராமனின் மகன்’ என்று அறிந்ததும் அன்றிரவே பேசி, ஓகே செய்து, அடுத்தநாள் காலையில், குமரிமாவட்டத்துக்கு ரயிலில் ஏற்றிக் கொண்டு வரச்செய்தார். முரளி... கார்த்திக் ஆகிப்புட்டார்
அடுத்தடுத்து எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் பொருந்திப் போனார் கார்த்திக். எந்த ஹீரோயினாக இருந்தாலும் பொருத்தமான ஜோடி என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.. எண்பதுகளில் தொடங்கிய கார்த்திக்கின் பயணத்தில்... ஏகப்பட்ட வெற்றிப் படங்கள். நூறுநாள் படங்கள். வெள்ளிவிழாப் படங்கள். அன்றைய காலகட்டத்தில், கார்த்திக்கிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். குறிப்பாக பெண் ரசிகர்கள். கார்த்திக் செய்த படங்களெல்லாம் வெரைட்டி, பியூட்டி கேரக்டர்கள். அவரைப் போலவே அவரின் ஹேர் ஸ்டைலும் அழகு. அப்போது அவரின் படத்தை வைத்துக் கொண்டு, சலூன் கடைக்குச் சென்று முடி வெட்டிக் கொண்ட ரசிகர்களும் உண்டு
அப்பேர்ப்பட்ட நவரச நாயகனுக்கு இன்னிக்கு 61வது பிறந்த நாள்.
Comments