தக்காளி அதிகம் சாப்பிடுவதால் இந்த ஆபத்துக்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்!

 தக்காளி அதிகம் சாப்பிடுவதால் இந்த ஆபத்துக்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்!



ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடச் சமையலிலில் இடம் பெறும் தவிர்க்க முடியாத ஒரு பழம் தக்காளி.


வைட்டமின் ஏ, சி, பி, பி6, நார்ச்சத்து, நியாசின் உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், தாமிரம் போன்ற சத்துக்கள் தக்காளியில் உள்ளன மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. 


 தக்காளிகள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறினாலும், அளவுக்கு அதிகமாக இந்த தக்காளியை உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும் மற்றும் உடலை பல வழிகளில் சேதப்படுத்து


இதனை அதிகமாக எடுத்து கொள்ளும்போது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தகூடியது. அந்தவகையில் தக்காளியை அதிகம் எடுப்பதனால் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.   


 தக்காளியில் அதிக அளவு மாலிக் மற்றும் சிட்ரிக் அமிலங்கள் உள்ளது. செரிமானம் தொடங்கியவுடன் தக்காளி இரைப்பையில் அதிக அமிலத்தாக்கங்களை ஏற்படுத்தும். இதனால் உணவுக்குழாயில் அதிக அமிலப்போக்கு ஏற்பட்டு நெஞ்செரிச்சல் ஏற்படும். 


 

 தக்காளியின் செரிமானம் அடையாத தோல் மற்றும் விதைகள் உங்கள் வயிற்றின் செயல்பாடு மற்றும் குடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இவை குடலில் ஒட்டிக்கொண்டு வீக்கத்தை ஏற்படுத்தும். 


 ஹிஸ்டமைன் என்பது தக்காளியில் உள்ள முக்கியமான சேர்மம் ஆகும். இதுதான் நமது உடலில் ஏற்படும் பலவித அலர்ஜிகளுக்கான காரணமாகும். எனவே உங்களுக்கு சருமம் சிவப்பாக தடித்தல், தொண்டை எரிச்சல் போன்றவை தெரிந்தால் உடனடியாக தக்காளி சாப்பிடுவதை நிறுத்திவிடவும்.


தக்காளி பழத்தில் கால்சியம் மற்றும் ஆக்சலேட் அதிகம் உள்ளது. இந்த சத்துக்களை உறிஞ்சுவதும், அவற்றை வெளியேற்றுவதும் மிகவும் கடினமான ஒன்று. இது நம் உடலில் அதிகம் சேர்வது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி