வி.சா.காண்டேகர்
வி.சா.காண்டேகர் காலமான தினமின்று!
‘கலை, கலைக்காக அல்ல; மக்களுக்காக; மக்களின் வாழ்விலே மணம் பரப்புவதற்காக; வாழ்க்கையைச் செம்மைப்பட வைப்பதற்காக’ – என்ற கொள்கையைத் தனது இலட்சியமாகக் கொண்டவர் இந்த- வி.சா.காண்டேகர்!
கொடுமைகளைக் கண்டு புரட்சி வீரர்கள் வாளை ஏந்திப் போராடுவார்கள்; மாறாக, எழுத்தாளர்கள் தங்கள் எழுதுகோலை ஏந்தி நாட்டு விடுதலைக்காக நாளும் போராட வேண்டும்’- என அறைகூவல் விடுத்தவர்! “இலக்கியம் என்பது மனிதத் தன்மையின் மேன்மையை உயர்த்த வேண்டும்; சமூகத்தில் நசுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும், மிதிக்கப்பட்டும் அடிமையாகக் கிடக்கும் அடித்தட்டு மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும். இதுவே, எழுத்தாளர்களின் கடமை”- என்று அறிவித்தவர்.
வாழ்க்கையில், ‘தொண்டு’ ‘அன்பு’ முதலியவற்றைத் தமது நியதியாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியவர். சமூகத்திலுள்ள இடர்ப்பாடுகளைக் களையவும், கொடுமைகளைப் போக்கிடவும், நீதி கிடைக்கவும், சமூகம் முன்னேற்றமடைந்திடவும் தனது எழுதுகோலைச் சுழற்றியவர் வி.சா. காண்டேகர்.
Comments