மீந்துபோன தோசை மாவில் சூப்பரான மெதுவடை

 

மீந்துபோன தோசை மாவில் சூப்பரான மெதுவடை


இந்த அற்புதமான ரெசிபியை தயார் செய்ய உங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது. வெறும் 10 நிமிடங்கள் போதும். அப்படி என்ன ரெசிபி என்றால், தின்னத் தின்னத் திகட்டாத மீந்துபோன தோசை மாவில் செய்த மெதுவடை



மீந்துபோன தோசை மாவில் மெதுவடை செய்யத் தேவையான பொருட்கள்:-

பிரட் துண்டுகள் – 3 (பிரட் துண்டை உதிர்த்து மிக்சியில் இட்டு அரைத்து கொள்ளவும்)
ரவை – 1/2 கப்
மீந்துபோன தோசை மாவு – 1 கப்
இஞ்சி – பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது
உப்பு – தேவையான அளவு

மீந்துபோன தோசை மாவில் மெதுவடை ஈஸி செய்முறை:-

முதலில் மிக்சியில் இட்டு அரைத்த பிரட் துண்டை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அவற்றுடன் ரவை மற்றும் மீந்துபோன தோசை மாவு சேர்க்கவும்.

பிறகு பொடியக நறுக்கிய இஞ்சி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்க்கவும்.

அவற்றுடன் மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

இதன் பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து வடை மாவில் வடை தட்டி பொரித்து எடுக்கவும்.

நீங்கள் தயார் செய்துள்ள இந்த அற்புதமான வடையுடன் தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு பிடித்த சட்னிகளுடன் சுவைத்து மகிழவும்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி