கல்தாமரை / உமாசங்கர் -கவிதை
கல்தாமரை
- -கவிதை
உற்றார் யாருமில்லை
உறவோர் எவருமில்லை
வற்றிய குளத்தில்
கல்தாமரை போலிங்கே நான்!
அரவணைக்க யாருமில்லை
அன்புகாட்ட ஒருவரில்லை
அன்யோன்யம் துளியுமின்றி
அன்னியமாய் நான்!
ஆரவாரம் ஏதுமில்லை
யாரிவறென்ற கேள்வியிலை
சிறகொடிந்த சிட்டாக
சீர்குலைந்த நான்!
பிள்ளை பருவத்திலே
பிஞ்சு மொழி மழலை பேசி
கவலையற்று இருந்திட்ட
காலமெல்லாம் போனதேனோ?
பெற்றோரின் தலைவிதியோ,
உறவினரின் சதியோ,
கண்ணிலே நீர் பெருக
காப்பகத்தில் நான்!
---உமாசங்கர்
Comments