ஜெய் அனுமான் / ஆஞ்சநேயர் வரலாறு/ கவிதைத் தொடர் (5)
ஜெய் அனுமான் / ஆஞ்சநேயர் வரலாறு/ கவிதைத் தொடர் (5)
குரல்
கேட்ட திசையில் திரும்பிய சீதை
குளிர்ந்த வார்த்தையினால் தடுமாறிய கோதை
இராவணனின் சூழ்ச்சியென சந்தேகம் உள்மனதில்
இருப்பினும் நிறுத்தினால் மாய்ப்பதை அப்பொழுதில்
கிளையிலிருந்து இறங்கி இராமநாமம் சொல்லியே
கணையாழி அளித்தான் சீதையிடம் கண்கலங்கியே
எம் தலைவன் இராமனென்றும் தூதுவனாய் வந்ததென்றும்
இனியுங்கள் கவலை தீர தாயே காத்திடுவேன் என்றும்
ஆறுதலாய் உரைத்த வார்த்தையால் செவி குளிர
ஆனந்தக் கண்ணீருடன் சீதையோ புத்துணர்வு பெற
கண்கலங்கியே கேட்டாள் உம் தலைவன் நலமாவென்று
கண்ணீரோடு அனுமனோ உம் வரவொன்று தான்
தரும் நலம் என்று
அனுமனால் உணர்ந்தாள் அவரும் வாடுவதென்று
ஆராத் துயருற்றாள் பிரிவே என்னாலென்று
கோடு போட்ட லட்சுமணன் சொன்னதை மீறியதால்
நாடுவிட்டு இராவணன் வசமே மாட்டியதாய்
தூய அன்னையே இப்போதே இராமனிடம் போகலாம்
இந்நாழிகை முதல் இத்துயரிலிருந்து மீள லாம்
இராவணன் தவறினை உணர்ந்திட வேண்டுமே
ஸ்ரீராமபிரான் இராவணனை வென்று மீட்கணுமே
அன்னையின் சொல்லை அறிந்தான் நியாயமென்று
அசோகவனத்தில் சீதை அளித்தாள் சூடாமணியொன்று
இவ்விடம் விட்டுப் போவதற்கு மனமில்லை தாயே
எம் தலைவன் ஸ்ரீராமன் வெல்லும் வரை பொறுப்பாயே
இப்போதே இராவணனை சந்திக்கப் பார்க்கிறேன்
இப்பொழுதில் என் தாயினை தனியே விட்டு போகிறேன்
தொடரும்)
கவிஞர் .முருக. சண்முகம்
சென்னை
Comments