உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?

 உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ இவற்றை கைவிடுங்க




! 💚❤️


ஒருவர் தான் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக வளர்சிதை மாற்ற நோய்கள், மூட்டு மற்றும் எலும்பு கோளாறுகள், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், அதிக எடை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இவற்றை எல்லாம் தவிர்க்க நாம் நிச்சயமாக பின்பற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்கள் உள்ளன. அவற்றை முறையாக பின்பற்றாத காரணத்தால் நம் உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புகள் மெது மெதுவாக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.


தூக்கத்தில் சமரசம்: வாழ்க்கையில் முன்னேற ஒருவருக்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவரது உடல்நலனை பேண தூக்கம் மிக முக்கியம். சரியாக தூங்காமல் தூக்கத்தில் சமரசம் செய்து கொள்வது என்பது மிகவும் ஆபத்தான பழக்கங்களில் ஒன்று. நீங்கள் ஒரு இரவு சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் உங்களுக்கு ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் கிறக்கம் இவற்றை கவனித்துள்ளீர்களா? நம் உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்கும் அளவிற்கு தூங்காமல், குறைவான மற்றும் தரமில்லா தூக்க பழக்கத்தை பின்பற்றுவதால் நோயெதிர்ப்பு மண்டலம், சுவாசம் மற்றும் செரிமான அமைப்பு உள்ளிட்டவற்றில் நாளடைவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே நம் உடல் இயற்கையான வேகத்தில் புத்துயிர் பெறுவதை உறுதிப்படுத்த தினமும் குறைந்தபட்சம் 6 மணிநேரமாவது தூங்க வேண்டும்.


நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல்: நீங்கள் அலுவலகத்தில் நாள் முழுவதும் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது அதிகளவில் புகைபிடிப்பதற்கு சமம். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, வேலைக்காகவோ அல்லது வாகனம் ஓட்டுவதற்காகவோ, அது நுரையீரல், மார்பகம் மற்றும் பெருங்குடல் போன்ற பல்வேறு புற்றுநோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது . ஒவ்வொரு இரண்டு அல்லது இரண்டு மணி நேரத்திற்கும் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு உங்கள் வேலையைத் தொடரவும்.


விலங்கு-புரத உணவுகளை அதிகமாக சாப்பிடுவது: சீஸ் மற்றும் இறைச்சி போன்ற புரதங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்வது, IGF1 என்ற ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்றுநோய் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த ஆபத்து காரணியை அதிகமாக எடுத்து கொள்ளும் ஒருவர் புகைப்பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் கூட, அவர் புகைபிடிப்பதற்கு சமமான பாதிப்புகளை உடலில் ஏற்படுத்துகிறது. எனவே இத்தகைய புரதங்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க, பீன்ஸ் போன்ற தாவர புரதங்களை உங்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி