சிவாஜி கணேசனின் பிறப்புச் சான்றிதழை வெள்ளிப் பேழையில்

 1962,செப்டம்பர் 28ம் தேதி விழுப்புரம் நகரமன்றம் சார்பில், சிவாஜிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரப் பட்டார் சிவாஜி கணேசன். விழா மேடைக்கு வரும் வழியில் நந்தவனம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வள்ளலார் சத்திய ஞான சபைக் கட்டிடத் தைத் திறந்து வைத்தார். பின்னர் அப்போதைய நகரமன்றத் தலைவர் டி.எஸ்.பத்தர் தலைமை யில் விழா நடை பெற்றது.


அதில், சிவாஜி கணேசனின் பிறப்புச் சான்றிதழை வெள்ளிப் பேழையில் வைத்து, நகராட்சி சார்பில் அவருக்கு அளிக்கப்பட்டது.
இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சிவாஜி கணேசன் “நான் பிறந்தது விழுப்புரத்தில்தான் என உறுதியாகக் கூறி, அதற்கான சட்ட பூர்வமான அத்தாட்சியை வழங்கியமைக்கு நன்றி: என் பிறப்பை பதிவு செய்தாரே ஒரு பியூன் அவருக்கு ஐம்பது அறுபது வயதிருக்கும். அவர் மூலம் எனக்கு அந்த சர்டிபிகேட் பிரசன்ட் செய்தார்கள். அன்று நான் அடைந்த சந்தோஷம் போல் என்றும் அடைந்ததில்லை. என்னுடைய பிறப்பிற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறதென்று, அப்போது நான் தெரிந்து கொண்டேன்'' என்றும் தன் சுய சரிதையில் கூறியுள்ளார்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி