சோ ராமசாமி கண்ணீர் சிந்திய இடம்
காமராஜரைக் காணச் சென்ற சோவிடம் இது குறித்துச் சொன்ன காமராஜர், அவரிடம் சட்டெனக் கேட்டார்… “நீ இவ்வளவு நாளும் இங்க வந்து போற, என்னைக்காவது உன்னை என் கூடச் சாப்பிட சொல்லியிருக்கேனா?”
இல்லை என தலையாட்டினார் சோ!
ஒரு காபியாது கொடுத்திருக்கேனா?
நெற்றியினைச் சுருக்கி இல்லை என்றார் சோ!
இங்கு அவ்வளவுதான் வசதி. நானும் என் சமையல்காரனும் சாப்பிடுற அளவுதான் வசதின்னேன், இது வாடகை வீடுண்ணேன்!
தில்லியில் இருந்து திடீர்னு வர்றவங்களுக்கு இங்க கொடுக்க ஒண்ணுமில்லை. அதான் வசதி உள்ளவங்க வீட்டுக்கு அனுப்புறேன், இது குத்தமா?!
ஒரு ஒண்டிக்கட்டை வீட்டுல என்ன இருக்கும்ணு தெரியாம அவனுக இஷ்டத்துக்கு எழுதுறானுக… என்று சொல்லிவிட்டு கலங்குகின்றார் காமராஜர்.
சோ ராமசாமி கண்ணீர் சிந்திய இடம் இதுதான்! இது ஒன்றுதான்.
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments