தூங்குவதற்கு முன்பு இதை செய்தால் சருமம் பொலிவு பெறும்.:
தூங்குவதற்கு முன்பு இதை செய்தால் சருமம் பொலிவு பெறும்.:
👉 சருமத்தை பராமரிப்பதற்கு பகல் பொழுதில் காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலானோர் இரவு பொழுதில் கடைப்பிடிப்பதில்லை.
👉 தூங்க செல்லும் முன் சருமத்தைப் பராமரிக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தைப் பேணுவது பயனற்றதாகிவிடும். இப்போது தூங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டியவை பற்றி இங்கு காண்போம்.
👉 இரவில் தூங்க செல்லும் முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஆனால் முகத்தை அதிகமாக அழுத்தி தேய்த்து கழுவக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். அது சருமத்தில் உள்ள துவாரங்கள் திறக்க வழிவகுப்பதுடன் அதிலிருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றி விடும்.
👉 மேக்கப் போட்டிருந்தால், எண்ணெய் தன்மை கொண்ட கிளிசரினை பயன்படுத்தி முதலில் மேக்கப்பை நன்கு நீக்க வேண்டும். அதன் பின் தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.
👉 வாரம் இருமுறை முகத்திற்கு நீராவி பிடிப்பது மிகவும் நல்லது. அது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் மற்றும் தூசுகளை நீக்கி விடும்.
👉 ஈரமான தலையுடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
👉 தலைமுடியை இறுக்கமாக கட்டிக்கொண்டு தூங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீளமாக கூந்தல் உள்ளவர்கள் தலை முடியை தளர்த்தி கட்டிக்கொள்வது நல்லது.
👉 தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். அது உடலுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. மேலும் கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்படுவதை தவிர்க்கும். முகம் சோர்வடைவதும் தடுக்கப்படும்.
Comments