மீந்து போன சாத;ததில் மொறுமொறு முறுக்கு

 மீந்து போன சாதம் 1 கப் இருந்தா போதும், ஈவினிங் டைம்ல மொறுமொறு முறுக்கு


காலையில் செய்த சாதம் மீந்து போன என்னடா பண்றது? அப்படின்னு இனிமே யோசிக்க வேண்டாம். ஒரே ஒரு கப் சாதம் இருந்தால் கூட அசத்தலான சுவையில் மொறுமொறுவென்று முறுக்கு சுட்டு இப்படி கூட செய்து சாப்பிடலாம். பொதுவாக பல பேருடைய வீட்டில் இரவில் டிபன் வகை செய்வது உண்டு. அந்த நேரத்தில் காலையில் செய்த அல்லது மதியம் செய்த சாப்பாடு வீணாகி இருக்கும். இப்படி வீணாகிப் போன பழைய சாதத்தை கூட சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக மாற்றி காட்டலாம். .இந்த பழைய சாத முறுக்கு செய்வது எப்படி? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளலாம்


பழைய சாத முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்: மீந்து போன சாதம் – ஒரு கப், கடலை மாவு – கால் கப், அரிசி மாவு – கால் கப், கருப்பு எள் – ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவுக்கு, எண்ணெய் – தேவையான அளவு.


பழைய சாத முறுக்கு செய்முறை விளக்கம்: உங்களிடம் இருக்கும் மீந்து போன பழைய சாதத்தை மாலையில் டீயுடன் மொறு மொறுவென்று முறுக்கு செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை, அதிக நேரமும் தேவையில்லை, ரொம்பவே சுலபமாக பத்தே நிமிடத்தில் அசத்தலான சுவையுடன் கூடிய இந்த முறுக்கு செய்வதற்கு தேவை பழைய சாதம் ஒரு கப். ஒரு கப் பழைய சாதத்தை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

சாதத்தை அரைத்ததும் மாவு போல தளர்ந்து இருக்கும். அதனுடன் கால் கப் கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த கப்பில் சாதம் எடுத்தீர்களோ, அதே கப்பில் மாவையும் எடுங்கள். அதே போல அரிசி மாவையும் கால் கப் அளவிற்கு சே



ர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் முறுக்கு ஃப்ளேவர் வருவதற்கு ஒரு ஸ்பூன் அளவிற்கு கருப்பு எள் சேர்த்துக் கொள்ளுங்கள், காரத்திற்கு மிளகாய் தூள் அரை டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் பெருங்காயம் ஒரு சிட்டிகை அளவிற்கு சேர்த்து இந்த மாவுக்கு தேவையான உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.


சாதத்தை அரைத்ததும் மாவு போல தளர்ந்து இருக்கும். அதனுடன் கால் கப் கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த கப்பில் சாதம் எடுத்தீர்களோ, அதே கப்பில் மாவையும் எடுங்கள். அதே போல அரிசி மாவையும் கால் கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் முறுக்கு ஃப்ளேவர் வருவதற்கு ஒரு ஸ்பூன் அளவிற்கு கருப்பு எள் சேர்த்துக் கொள்ளுங்கள், காரத்திற்கு மிளகாய் தூள் அரை டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் பெருங்காயம் ஒரு சிட்டிகை அளவிற்கு சேர்த்து இந்த மாவுக்கு தேவையான உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.


எண்ணெய் நன்கு காய்ந்ததும் முறுக்கு பிழியும் பாத்திரத்தில் போட்டு வழக்கம் போல நீங்கள் எப்படி முறுக்கு ஜல்லி கரண்டியை திருப்பி பிழிவீர்களோ அதே போல பிழிந்து எண்ணெயில் அழகாக போடுங்கள். நீங்கள் மாவை போட்ட உடன் எண்ணெய் கொதிக்க ஆரம்பிக்கும். எண்ணெயில் முட்டை முட்டையாக பபுள்ஸ் வர ஆரம்பிக்கும். இந்த பபுல்ஸ் அடங்கும் வரை திருப்பி போட்டு விடாதீர்கள். அவை அடங்கியதும் திருப்பி போட்டால் தான் உள்ளே நன்கு வேகும்.


திருப்பி போட்டதும் மறுபுறமும் இதே போல பபுள்ஸ் அடங்கியதும் எண்ணெயை வடிகட்டி ஒரு டிஷ்யூ பேப்பரை தட்டில் விரித்து முறுக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக போடுங்கள். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக பத்தே நிமிடத்தில் மீந்து போன பழைய சாதத்தை கொண்டு அற்புதமான மொறுமொறு முறுக்கு இது போல் செய்து விடலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி