வாக்கிங் போன முதல்வரை மறித்த பெண்

 

வாக்கிங் போன முதல்வரை மறித்த பெண்





முதல்வர் ஸ்டாலின் இன்று  21.9.20221 காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அவரிடம் மக்கள் பலர் இயல்பாக உரையாடல் நிகழ்த்தினார்கள். முதல்வரிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்க, அதற்கு முதல்வரும் இயல்பாக பதில் சொன்ன விதம் பலரையும் கவர்ந்து உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பொதுவாக பிட்னஸில் அதிக கவனம் செலுத்த கூடியவர். தனது உடலை நன்றாக வைத்துக்கொள்ள அடிக்கடி சைக்கிளிங் செல்வார். இந்தியாவிலேயே அடிக்கடி சைக்கிளிங் செய்யும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான்.

அது மட்டுமின்றி இன்னொரு பக்கம் அடிக்கடி முதல்வர் ஸ்டாலின் ஜிம்மிற்கு செல்வதும், நேரம் கிடைக்கும் போது வாக்கிங் செல்வதும் வழக்கம். இந்த நிலையில்தான் இன்று சென்னை தியோசபிக்கல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்..


அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரம் கொடுத்து, நடந்தபடியே பதில் அளித்தார். அங்கு நடை பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களுடன் ஸ்டாலின் இயல்பாக உரையாடினார். முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் அங்கு வந்த பெண் ஒருவர், சார் இரு வருடங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் உங்களை சந்தித்தேன். . உங்களோடு அப்போது செல்பி எடுக்க முடியவில்லை. நீங்கள் கட்டாயம் ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும் என்று அன்று நான் கூறினேன். நீங்கள் தேர்தலில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று கூறினேன். உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறன்

தற்போது அதே போல் நீங்கள் தேர்தலில் வென்றுவிட்டீர்கள். நீங்க ஆட்சிக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்றீங்க. உங்கள் ஆட்சி சிறப்பாக உள்ளது. திட்டங்களை சிறப்பாக கொண்டு வருகிறீர்கள். உங்கள் ஆட்சி இனியும் அப்படியே தொடர வேண்டும், நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்" என்று கூறினார்.



அதன்பின் அவர் கேட்ட கேள்வி ஒன்று அங்கிருந்தவர்களை திரும்பி பார்க்க வைத்தது. "கடைசியா ஒன்று கேட்கிறேன் சார், எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க? எப்படி சார் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று கேட்டார் .அதற்கு முதல்வர் ஸ்டாலின் நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று கூறினார். இதை கேட்டதும் அந்த பகுதி கலகலப்பானது. இதற்கு அந்த பெண் ஆமாம் சார்.. நானும் அந்த வீடியோவையும் யூடியூப்பில் பார்த்து இருக்கிறேன் சார் என்று அந்த பெண் கூறினார்.

நம்பிக்கை அதன்பின் கால்பந்து விளையாட்டிற்காக ஸ்பெயின் சென்றுள்ள உங்கள் பேரன் நன்றாக ஆடுவார் என்று நம்புகிறோம். அவர் வெற்றியுடன் திரும்ப வேண்டும். அவர் பயிற்சி எடுக்கும் போது நாங்கள் அவரை பார்த்திருக்கிறோம், என்று அந்த பெண் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி