விண்ணளக்கும் சாகச பறவை

விண்ணளக்கும் சாகச பறவை





        







         அந்த சின்ன பெண்ணின் 

கையில் கலீலியோ பயணங்கள் என்ற அந்த புத்தகம் அதை படித்த அவள் அவரோடு பயணித்தாள். பின்னர் பல புத்தகங்களை தேடி, தேடி படித்தாள். ஏன் இந்த மாதிரி எழுதியிருக்கலாம். ஆஹா இது அருமை என பல எண்ணங்கள். அவளுக்கு எழுத்தாளர்களே கதாநாயகர்கள், கதாநாயகிகள்.

கூடவே நாம் ஏன் ஒரு புத்தகம் எழுதக் கூடாது என்ற ஆவல் மனதுக்குள் உதித்தது. 

அது ஒன்றும் எளிதல்ல என்பது பின்னே புரிந்தது. எங்கு போவது? யாரை அணுகுவது? நிறைய பணம் தேவையா? தன் எழுத்து நன்றாக உள்ளதா? என்கிற குழப்பம் பெருமளவில் இருந்தது. 

அப்படியே வயது கடந்து அந்த பெண் இலக்கியத்தில் முனைவர் பட்டம் வாங்கிய பின்பும் அந்த ஆசை இருந்து கொண்டே இருந்தது.

அவளை போலவே கனவுகளோடு ஆயிரக்கணக்கான திறமைசாலிகள் இருப்பது தெரியவந்தது. பலர் திறமைகளை வெளிபடுத்தமுடியாமல் குடும்பத்தில் மூழ்கி நாற்பது வயதை கூட கடந்து இல்லதரசிகளாக, இருந்துகொண்டிருந்தனர் என்பது தெரிய, அவள் எடுத்த முடிவு pachydermtales literary consultancy.

அந்த பெண். டாக்டர். லட்சுமிப்ரியா. இந்த pachydermtales ஒரு குடும்பம். இதில் முழுமனதோடு மிகுந்த திறமைமிக்க இளம் பெண்கள் செயல்படுகின்றனர். அனைவரின் நோக்கம் நல்ல புத்தகங்களை கொண்டுவருதல். அரசியல், சாதி, மதம், ஆண், பெண், திருநர் என்ற எந்த வரையரையும் கிடையாது.எழுத்தாளர்களுக்கு முழுஉரிமை உள்ளது. 

           சிறுவயதில் புத்தகங்கள் உண்டாக்கிய மாய உலகில் சஞ்சரித்துச் சந்தோஷித்த டாக்டர். லட்சுமிப்ரியா.  தாமும் கதைகள் எழுத ஆவல் அதிகரித்தது  இந்தக் கனவு அவர் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்குச் சிறந்த தூண்டுகோலாக இருந்துள்ளது. சிறந்த எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பின் உருவானார். பல கீழைத்தேசங்களில் இலக்கியம் பற்றி உரையாற்றியுள்ளார். மாணவர்களிடையே படைப்புத் திறமையை வெளிக்கொணரும் பேராசிரியராகவும் இருக்கிறார்.

 ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் பின் சிறந்த எழுத்தாளராக . மற்றும் மொழிபெயர்ப்பாளராக உருவெடுத்தார்

. இவரது படைப்பில் உண்டான சில நூல்கள். White house and black shrouds, gun powder series, tale spin. 

   இவர் கதைசொல்லி பவா செல்வதுரை அவர்களின் பங்குகறியும் பின் இரவுகளும் என்கிற நூலையும், எழுத்தாளர். கார்த்திகை பாண்டியன் அவர்களின் மரநிற பட்டாம்பூச்சிகள, நீலநிறம் தோய்ந்த புதினம் என்கிற  நாவலை மொழிபெயர்த்துள்ளார்

     








 இவர். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேஷியா, பூட்டான், போன்ற நாடுகளில் இலக்கியப் பற்றி உரையைச் சிறப்பாக ஆற்றியுள்ளார். இந்தியாவில், குறிப்பாக டார்ஜிலிங், சண்டிகர், நேபாள் போன்ற இடங்களில், மற்றும் அயல்நாடுகளில் மாணவர்களின் உள்ளிருக்கும் படைப்பு தன்மையைக் கொண்டு வரும் ( creative Witte) வகையில் பேராசிரியராகவும் இருக்கிறார். சிறந்த கல்வி இதழ்களிலும் இவரது கட்டுரைகள் ஆய்வுகள் வெளியாகி உள்ளது. 

. இவர் தானே எழுத்தாளராக ஆனபோதுதான், இதே கனவோடு எத்தனை மனிதர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள், அவர்கள் கதைகள் அச்சேறாமல் ஆகாயக் கோட்டைகளாக முடிந்துவிடுகிறது என்பதை உணர்ந்தார் . அந்தப் புது எழுத்தாளர்களின் கரங்கள் சமுதாயப் புரட்சியை உண்டாக்க வல்லவை, சமுதாயத்தின் அவலங்களுக்குத் தீர்வு காணவும் தீர்ப்பு எழுதவும் வல்லவை என்பதை  அறிந்தார்

. மேலும் இன்றைய இளைஞர்களுக்கு நம் பண்பாடு, கலாச்சாரம் இவற்றை எடுத்துச் செல்ல, பன்னாட்டுக் கலாச்சாரங்களை அறிமுகம் செய்ய ஆகிய மிக முக்கியமான சேவைகளை ஆற்றவல்லவர்கள் எழுத்தாளர்களும் அவர்களின் தரமிக்க நூல்களுமே என்பது சமூகநலனின்மீது அதீத அக்கறை கொண்ட  இவர்  மனதில் ஆணித்தரமான அபிப்ராயம் உருவானது. 

இந்த எண்ணங்கள் லட்சியமாகப் பரிணமிக்க, தோன்றியது Pachyderm Tales. "எல்லோருள்ளும், எல்லோருக்கும் கூறுவதற்குக் கதைகள் உண்டு" என்ற மந்திரத்தைக் கொள்கையாகக் கொண்டு லட்சுமிபிரியாவால் உருவாக்கப்பட்ட நிறுவனம் இது. அறிமுக எழுத்தாளர்களின் எழுத்துகள் அச்சு வடிவமும் மின்னூல் வடிவமும் பெறுவதற்கு உதவி செய்கிறது இந்நிறுவனம்.

 உக்கியோட்டோ பதிப்பக நிறுவனத்துடன் இணைந்து ஒரே ஆண்டுக்குள் பலப்பல துறைகளில் ஆங்கிலம், தமிழ், பெங்காலி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, நேபாளி போன்ற பல மொழிகளில் பல்வேறு நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இது நம் மாநிலம், நம் நாடு என்று மட்டுமில்லாமல் உலக அளவில் முக்கியமாக வளரும் நாடுகளில் இருந்தும் நம்மோடு பல புனைவுகளில் பங்குபெறுகிறார்கள். 

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவையும் கொண்டிங்கு சேர்ப்பீர் என்ற மகா கவி பாரதியின் இந்தக்கூற்றை  சிறுவயதிலிருந்தே தன் மனதில் ஏற்றிக் கொண்டு அயராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் - இதன் நிறுவனர் டாக்டர் லட்சுமிபிரியா.

   இந்த நிறுவனம் கொரோனா முதல் அலையின் தாக்கம்  லாக்டவுன் சமயத்தில் சோர்ந்தவர்கள்   பலரை எழுத வைத்து இதோ இப்போது 100புத்தகங்களோடு நடைபோடுகிறது இந்தியா மட்டுமில்லாமல் மலேசியா, நைஜீரியா, சிங்கப்பூர், தாய்லாந், நெதர்லாந், சிங்கப்பூர், லண்டன் போன்ற நாடுகளில் இருந்தும் எழுதுகிறார்கள். 

 இதைத்தவிர  கல்லூரிகளுடன் சேர்ந்து பல creative வகுப்புகளும்  மற்றும்  மொழிபெயர்ப்பும் செய்து தரப்படுகின்றன. புத்தக வாசிப்பு குறைந்து வரும் இக்காலகட்டத்தில் மாணவ, மாணவியருக்காக  தற்கால ரசனையுடன் எழுதுவதால் மிகவும் எளிதில் படிக்ககூடிய வகையில் நூல்கள் உள்ளன

மற்றும் நமது பாரம்பரிய உணவு, போன்ற விஷயங்கள் பழைய ருசி மாறாமல் புதியதாக சொல்லபடுகிறது.



ஆரம்ப எழுத்தாளர்களுடன் தலைசிறந்த எழுத்தாளர்களும்  pachydermtalesல் தங்கள் படைப்பை வெளியிட்டு வருவது பாராட்டதக்கது

பல  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தோடு சேர்ந்து நம்மோடு  பல நிகழ்வுகளில் பங்கேற்பதும் வரவேற்க வேண்டிய அம்சமாகும்


.

,இதைத்தவிர லட்சுமிபிரியா அவர்கள் குழந்தைகள், வாழ்வில் பெருஞ்சோதனைகளைச் சந்தித்த பெண்கள், திருநர் போன்றவர்களுக்கு ஊக்கமளித்து  செய்துவரும் சேவை எல்லோராலும் பாரட்டப்பட்டு வருகிறது



---உமாதமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி