நீ வாசித்து விட்டு போ
நீ வாசித்து விட்டு போ
-கவிதை
நான் எப்போதும்
கனவுகளின் வழியே
உன் ஞாபகங்களை சேகரிக்கிறேன்
எதற்காக உன் குரல்
எனக்குள் ஒலித்துக்கொண்டே
இருக்க வேண்டும்..
எதற்காக உனது பிம்பங்கள்
கண்முன்னே காட்சிகளாக
தோன்றுதல் வேண்டும்..
இந்த விளையாட்டின் விதிதான் என்ன...
உன் அருகாமை என்பது
என் காத்திருப்பு
எனது கவிதைக்கான
திறவுகோல்
அப்படியே நான் எழுதிக்கொண்டேயிருக்கிறேன்
நீ வாசித்து விட்டு போ
...
Comments