தினமும் 2 டம்ளர்! மிளகு தூளை பொடியாக்கி.. இப்படி செய்து பாருங்கள்! நன்மைகள் ஏராளம் .
தினமும் 2 டம்ளர்! மிளகு தூளை பொடியாக்கி.. இப்படி செய்து பாருங்கள்! நன்மைகள் ஏராளம் ...
மிளகு தூள் சமையலுக்கு தேவைப்படும் முக்கிய பொருளாகும். இதனால் உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளதால் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் மிளகை பொடியாக்கி வெறும் தண்ணீரில் கலந்து தினமும் 2நாட்கள் குடித்து வந்தால் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சரி வாங்க மிளகின் உள்ள மற்ற நன்மைகளை குறித்து பார்க்கலாம்..
தயாரிக்கும் முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். பிறகு மிளகை வாணலியில் நன்றாக வறுத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அதில் ரோஜா இதழ், 2 ஸ்பூன் அளவு மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் வடிக்கட்டி தினமும் 2 டம்ளர் குடித்து வந்தால் நன்மைகள் ஏராளம்.
நன்மைகள்:-
இந்த தண்ணீர் உங்கள் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது மிளகில் உள்ள காரத்தன்மை உடலில் உள்ள கலோரிகளை விரைவாக கரைக்க உதவும். அதோடு டயட்டின் போது மிளகு தண்ணீரை குடித்து வந்தால் ஈசியாக உடல் எடை குறைய வழிவகுக்கும்.
எலும்பு பிரச்சனை இருப்பவர்கள் தினமும் 2 டம்ளர் மிளகு நீரை குடித்து வர எலும்புகளுக்கு ஆரோக்கியத்தையும் உறுதித் தன்மையும் கிடைக்கிறது.
வெயில் காலத்தில் உடல் நீர்ச்சத்து குறைவது அதிகரிக்கும். இதற்கு மிளகு நீரை காலையில் ஒரு டம்ளர் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் என பருக உடல் வறட்சியைத் தடுக்கலாம்.
Comments