10 நிமிடத்தில் அரிசி மாவை வைத்து, இந்த மொறு மொறு இன்ஸ்டன்ட் தோசை

 10 நிமிடத்தில் அரிசி மாவை வைத்து, இந்த மொறு மொறு இன்ஸ்டன்ட் தோசை





இட்லி மாவு, தோசை மாவு இல்லை என்றால் இனி கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் கடையில் வாங்கிய பச்சரிசி மாவு அல்லது இடியாப்ப மாவு அல்லது நீங்கள் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவு எது இருந்தாலும் சரி, அந்த அரிசி மாவை வைத்து மொறு மொறு தோசை எப்படி சுடுவது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 கப் பச்சரிசி மாவை போட்டுக்கொள்ள வேண்டும். எந்த கப்பில் அரிசி மாவை அளந்து எடுத்தீர்களோ, அதே கப்பில் 2 1/4 கப் அளவு தண்ணீரை அந்த மிக்ஸி ஜாரில் ஊற்றி, இரண்டு ஓட்டு ஓட்டி கொள்ளுங்கள். அரிசிமாவு எந்த கட்டிகளில்லாமல் தண்ணீரில் கரைந்து தோசை மாவு நமக்கு கிடைத்துவிடும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.


இதுதான் தோசைக்கு நாம் பயன்படுத்த போகும் மாவு. இந்த மாவு கொஞ்சம் தண்ணீராகத் தான் இருக்க வேண்டும். அப்போது தான் தோசை மொறு மொறு வென வரும். இந்த தோசை மாவில் தேவையான அளவு உப்பையும், 1/2 ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கரைத்து மூடி போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மாவு 10 நிமிடங்கள் ஊறிய பின்பு இந்த மாவில் நாம் சில பொருட்களை சேர்க்க வேண்டும்


இஞ்சித் துருவல் – 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை தேவையான அளவு, கேரட் துருவல்  1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, மிளகு – 10, சீரகம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை பத்து நிமிடம் ஊறிய மாவோடு சேர்த்து நன்றாக கலந்து விட்டு விடுங்கள். இப்போது நமக்கு தோசை சுடுவதற்கு மாவு தயாராக உள்ளது.


ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து விட்டு நன்றாக சூடு செய்து கொள்ளவேண்டும். கொஞ்சமாக எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள் தோசைக்கல்லில். அதன்பின்பு தயாராக இருக்கும் தோசை மாவை எடுத்து தோசைக்கல்லில் ரவா தோசை வார்ப்பது போல தோசை கல்லை சுற்றி ஊற்றவேண்டும். தோசை ரவா தோசை போலவே ஓட்டைகளோடு இருக்க வேண்டும். இந்த தோசையின் மேலே உங்கள் தேவைக்கு ஏற்ப எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தோசையை சிவக்க வைக்கலாம். அவ்வளவு தான் தோசை ரெடி.


தோசைக்கல்லில் வார்க்கும்போது அடுப்பில் தீ ஹை ஃபிலேமில் இருக்க வேண்டும். தோசை ஊற்றிய பின்பு, கல்லில் தோசை சிவக்கும் போது, அடுப்பை சிம்மில் வைத்து, தோசையை மொறு மொறுவென சிவக்க வைத்து எடுக்க வேண்டும். ஒவ்வொரு தோசை வார்க்கும் போது மாவை அடியோடு சேர்த்து கலந்துவிட்டு அதன் பின்பு தோசை வார்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் மேலே தண்ணிரீக வந்து விடும். அடியில் அரிசி மாவு அப்படியே நின்றுவிடும்.



மேலே சொன்ன முறைப்படி இந்த அரிசிமாவு தோசையை உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. இதற்கு சைட் டிஷ் ஆக சாம்பார், தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, காரச் சட்னி எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தோசையை விரும்பி சாப்பிடுவாங்க. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க..

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி