Kuruthi | குருதி மலையாள திரைப்படம்

 

குருதி

Kuruthi | குருதி

மலையாள திரைப்படம்

 இந்த படத்தை அமேசான்OTTயில

பார்த்தேன்.

வழக்கம் போலஎன்னோட பார்வையில் .






கோபமும், பழிவாங்கலும் மிக சகஜமாக  கிளர்ந்து எழும் சூழலில் நாம் நியாயத்தின் பக்கம் நிற்கிறோமா அல்லது நமக்கு வேண்டியவர்களின் பக்கம் நிற்கிறோமா என்னும் கேள்வியை சில வாதங்கள் மற்றும் பிரதிவாதங்களின் ரீதியில் எழுப்புகிறது இந்த 'குருதி'!

அறிமுகம் இயக்குநர் மனு வாரியர், அனிஷ் பல்யாலின் கதை, திரைக்கதை, வசனம்

இவர்களின்  உழைப்பு படம் முழுவதும் ஆனால் அவர்கள் அறம் என்ற பக்கம் நிற்கவில்லையா என ஒரு கேள்வி எழுகிறது!

நடுநிலைவாதியாக ஒரு படம் கொடுக்கவேண்டும் என்ற பிரயத்தனம் இவர்களிடம் இருந்திருக்கலாம்

 படத்தை முழுமையாக பார்த்தபின்  அதிலிருந்து விலகி ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே அதிக முறை குற்றவாளிக்கூண்டில் ஏற்றியது போல ஒரு எண்ணம் வராமல் போகவில்லை.

ஓர் இரவு. இழப்புகளும் இறப்புகளும் நிகழ்ந்த கேரளாவின் ஒரு மலைக் கிராமத்தின் இப்ராஹிம் வீட்டுக்கு ஒரு சப் இன்ஸ்பெக்டரும் அவர் கைது செய்த கொலைக் குற்றவாளியும் அழையா விருந்தாளிகளாக அடைக்கலம் தேடி வருகிறார்கள்

அந்த வீட்டுக்குச் சற்று தள்ளி அதே நிலச்சரிவில் தனது மனைவியை இழந்த பிரேமனும் (மணிகண்ட ராஜன்) அவரது தங்கை சுமதியும் (ஸ்ரீண்டா) வசிக்கிறார்கள். வெவ்வேறு மதங்களைச் சார்ந்திருந்தாலும் இயற்கைப் பேரழிவால் இணைக்கப்பட்ட இவ்விரு குடும்பங்களும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

சுமதிக்கு இப்ராஹிம் மீது காதல். ஆனால், மனைவி, மகள் இறந்து ஓராண்டு ஆகியும் இன்னும் அத்துயரத்திலிருந்து முழுமையாக மீளாமல் இப்ராஹிம் இன்னொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்வதில் இருக்கும் தயக்கத்தையும் சுமதியிடம் வெளிப்படுத்துகிறார்.

 . இந்து மத அடிப்படைவாதியான அந்தக் குற்றவாளியை கொன்றுவிடத் துரத்துகிறது முஸ்லிம் அடிப்படைவாதியான லாய்க் என்பவனின் படை. இப்ராஹிம் என்ன முடிவெடுத்தார், 'குற்றவாளியே என்றாலும் தண்டனையை சட்டம்தான் தர வேண்டும்' என்ற சித்தாந்த்தின்படி  அந்த இந்து இளைஞனைக் காப்பாற்றினாரா, இல்லை தன் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக லாய்க்கிற்கு ஆதரவாக நின்று அவனைக் கொலை செய்ய துணை போனாரா?

. . அந்த இரவில் அந்த இரு குடும்பங்களின் வாழ்வையும் புரட்டிப் போடும் சில சம்பவங்கள் நிகழ்கின்றன. அதன் பிறகு என்னவானது என்பதே குருதி.

படத்தின் நாயகன் ரோஷன் மேத்யூதான் இப்படத்தை ஒற்றை ஆளாகத் தூக்கிச் சுமக்கிறார். மூத்தோன், கப்பேலா ஆகிய படங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடித்தவர்  . மனைவியையும், மகளையும் இழந்த சோகத்தை எந்நேரமும் கண்களில் சுமக்கும் கதாபாத்திரம். அந்த சோகத்தை, பார்ப்பவர்களுக்கும் எளிதே கடத்தி விடுகிறார்.

 முறிந்த கிளைகளை வைத்துக்கொண்டு நாள்களைக் கடத்த எத்தனிக்கும் அவர்  நெருக்கடியான சூழலில் எல்லோரும் தங்களின் தேவையின் பொருட்டு இடம் மாறி நிற்க, இறுதிவரை சத்தியத்தின் பக்கம் நிற்க முயலும் ஒரு கதாபாத்திரம். சிறப்பாக நடித்திருக்கிறார்.

.  ஒவ்வொரு காட்சியிலும்  உடம்பு சதையெல்லாம் மிருகத்தனதை கொண்டு  சண்டை போடும் லாய்க் என்னும் கதாபாத்திரத்தில் பிரித்விராஜ்.  படத்தின் 45-வது நிமிடத்தில் தான் எதிர்மறை நாயகனான நுழைகிறார். அவர் ஏன் எதிர்மறை என்பதற்கான காரணங்களும் விவரிக்கப்படுகின்றன. அதன் பிறகு படத்தைத் தாங்கிச் செல்வது பிரித்வி, பிரித்வி, பிரித்வி மட்டுமே! . வழக்கம்போல எந்தக் குறையும் சொல்லமுடியாத அளவுக்கு நேர்த்தியாகச் செய்திருக்கிறார்

 எஸ். சத்யனாக சில காட்சிகளே வந்தாலும் முரளி கோபியின் அந்த அடாவடி உடல்மொழி செம !

 இந்து அடிப்படைவாதியான சிறுவன், அவரை மதம் எனும் போர்வையில் குழப்ப நினைக்கையில், "உன் ஃபார்வேர்ட் மெசேஜ்லாம் வாட்ஸ்அப் குரூப்போட வெச்சுக்கோ!" என அவர் சொல்லும் இடம் அருமை!

கரீம் எனும் கம்முவாக வரும் ஷைன் டாம் சாக்கோ அமைதியாக பேசியே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், 'கூட்டம் சேர்த்து சுற்றும் சிறுபான்மையினர் தாக்குவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்' என்ற கருத்தை அந்தப் பாத்திரம் மூலம் முன்வைக்கிறது படம்

 

 சுமா எனும் சுமதி பாத்திரத்தில் ஸ்ரீந்தா சரியாகப் பொருந்தியிருக்கிறார். இயல்பான நடுக்கம், குழப்பம் என்று இருந்தபோதும், பல இடங்களில் அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகள்தான் பரபரப்பான கதையின் போக்குக்கு உதவியிருக்கின்றன. இருந்தபோதும் இயல்பான பக்கத்துவீட்டுப் பெண்ணாக வரும் அவரையும் கடைசியில் இந்து மத அடிப்படைவாதியாக சித்திரித்திருப்பது, மத அரசியல் பேச வைத்திருப்பது நெருடல். அதற்கான வலுவான காரணங்களும் முன்வைக்கப்படவில்லை. சரியாகத் திட்டமிடப்படும் எல்லா விஷயங்களும் ஏதோவொரு இடத்தில் சரியும்.

திரைப்படத்தின் ஆன்மாவாக, எந்தச் சூழலிலும் மாறா நிலையுடனும் இருக்கும் மூஸாவாக மம்முகோயா.450 படங்களில் நடத்திருக்கும் இவர்ஒரு காமெடி நடிகர்

இந்தப் படத்தின் குழப்பங்களைக் கடந்து படத்தில் ஒன்ற வைப்பது அவரின் அசத்தலான நடிப்புதான். தத்துவங்களை அள்ளி தெளித்து , பழைய புராணங்களில்நாம்  மார்தட்டிக்கொள்ள எதுவுமில்லை எனச் சொல்லவதாகட்டும், நிகழ்காலத்தின் நம்மால் சில விஷயங்களை சகித்துக்கொள்ள முடியாதாயினும், வேறுவழியின்றி அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் இப்படியான வசனங்களை அதன் போக்கில் பேசிச் செல்கிறார்.

90 சதவீதப் படம் இருட்டிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. எனினும் பார்ப்பவர்களுக்கு எந்த உறுத்தல் இல்லை .அவற்றை  காட்சிப்படுத்திய விதத்தில் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்தின் உழைப்பு அருமை.

 படத்தின் ஹீரோ ரோஷன் மேத்யூவா, பிரித்விராஜா, மம்முகோயாவா என்ற சந்தேகம் வேண்டுமானால் தோன்றலாம். ஆனால் நிச்சயம் அதன் இரண்டாவது ஹீரோ எவ்வித போட்டியுமின்றி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்தான். திரைக்கதை சோடை போகும் இடத்திலும் நம் நரம்புகளை அதிரச் செய்து டெம்போவை கூட்டியிருக்கிறார். பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் வன்முறை படம் முழுக்க ,. படத்தின் காட்சிகளுக்குத் தேவையான பின்னணி இசையைக் கொடுத்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய்.

படத்தின் மிகப்பெரிய பலம் அனிஷ் பல்யாலின் வசனம்.

 படம் தொடங்கியது முதல் இறுதிக் காட்சிவரை நெகிழச் செய்யும் கூர்மையான பல வசனங்கள் படத்தில் உண்டு. அதிலும் முக்கியமான தருணங்களில் தனக்கே உரிய அப்பாவித்தனத்தோடு மம்முகோயா நகைச்சுவையுடன் பேசும் வசனங்கள் டாப் கிளாஸ்

. தொடக்கத்தில் வழக்கமான த்ரில்லர் மலையாள சினிமாவாக கதாபாத்திரங்களின் வாழ்க்கைமுறை, பின்கதைகள், வீட்டிலிருக்கும் குளவிக்கூடு என்பதுவரை இப்ப முன் பகுதியில் சம்பவங்கள்

 நாம் எதிர்பார்த்ததுபோலவே அந்த ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் பிற்பாதியில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால், இந்த சுவாரஸ்யமான வேகமான திரைக்கதை பின் பகுதியில்  சித்தாந்த ரீதியாக படம் எப்படிப் புரிந்துகொள்ளப்படும் என்பதை யோசிக்காமல் விட்டதால் திராசின்  ஒரு பக்கம் அதிக கணத்தை வைத்துவிட்டு, இரண்டும் சமம் என்பதற்காக தராசு முள்ளை அழுந்தப்பிடித்து கோட்டை விட்டார் கதாசிரியர். இதுவே இந்த படத்தின் பலவீனமாக அமைகிறது

. நாட்டில் நிலவும் மதவெறியையும் சகிப்பின்மையையும் பற்றிப் படம் பேசுகிறது. இப்படி ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்ட இயக்குநர் அதை மிக கவனமாகக் கையாண்டிருக்க வேண்டும். படத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த கதாபாத்திரங்கள் எதற்கெடுத்தாலும் கத்தியைத் தூக்குவது, அதற்குக் கடவுளின் வார்த்தைகளைத் துணையாக எடுத்துக்கொள்வது போன்ற காட்சியமைப்பு பார்ப்பவர்களுக்கு நெருடலை ஏற்படுத்துகிறது

. இயக்குநர் சொல்லவந்த கருத்தின் நோக்கம் சரியானதாக இருந்தாலும் கூட அது சொல்லப்பட்ட விதத்தில் திசைமாறிச் சென்று பார்வையாளர்களுக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் படம் முழுவதும் ஏராளமாக இருக்கின்றன.

குற்றம் சாட்டப்படும் இந்துச் சிறுவனின் குற்றங்கள் வெறுமனே வார்த்தைகள் மூலம் பார்வையாளனுக்கு சொல்லப்படுகிறது அதே சமயம், லாய்க் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரித்விராஜின் கதாபாத்திர வார்ப்பு ஒரு பழிவாங்குதல் என்பதைக் கடந்து எழுதப்பட்டிருக்கிறது.

அந்தச் சிறுவன் சொல்லும், செய்யும் எல்லா விஷமங்களும் அவன் தப்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை இப்படம் நமக்கு உருவாக்கிவிடுகிறது. அங்கேதான் படத்தின் நடுநிலை என்ற பிம்பமும் உடைகிறதோ என்ற கேள்வி எழுகிறது.

சமூகத்தில் இருக்கும் இரு குழுக்களின் சம மனநிலை என்பதைக் கடந்து அதீத வன்முறை கொண்ட ஒரு குழு உருவாகுவது இன்னொன்று

 சூழ்நிலையால் உந்தப்பட்டு தவறு செய்யும் ஒரு குழு என்கிற நிலையில் கதை தொக்கி நிற்கிறது.

 

.

அரசாங்கங்களின்  பயங்கரவாதம், மைனாரிட்டிகளின் மீது நடத்தப்படும் தாக்குதல் இவைகளுக்கு  நீதி பெறுவதற்கான இடம் நீதிமன்றம்தான். எச்சூழல் வந்தாலும், தன்னிலை தவறாது நிற்கும் இந்து காவல்துறை அதிகாரி

அதே நேரம்  சூழ்நிலையில் சிக்கி உழலும் இஸ்லாமிய இப்ராஹிம் கதாபாத்திரங்களே இப்படம் இவர்களின் இரு பக்க தர்க்கங்களையும் சரியாக முன்வைக்கவில்லை என்பது தெள்ள தெளிவாக காணலாம்.

.

குறிப்பாக பிரித்விராஜ் போன்ற அசத்தலான நடிகரின்  நியாயம் என்ற பூச்சுக்கு அவர் பேசும் அடிப்படைவாதம் நமக்கு  நிச்சயம் குழப்பத்தை வரவழைக்கிறது

திறமைமிகு நடிகர்களின் அற்புதமான நடிப்பு முதல் பாதியில்

பின் பகுதியில்  ஆக்ஷன் காட்சிகkurளை தவிர்த்து படத்தின் திரைக்கதைக்கு சற்றே நியாயம் செய்திருந்தால்  மிகவும் பாராட்டதக்க படமாக குருதி இருந்திருக்கும்.

 

-உமாதமிழ்

 

 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி