உங்கள் உதடு கருப்பாக இருப்பதற்கு இது தான் காரணம்..

 

உங்கள் உதடு கருப்பாக இருப்பதற்கு இது தான் காரணம்..

காரணம்.. இனி இதை செய்யாதீங்க..









முகத்தின் அழகிற்கு முக்கிய பங்கு வகிக்கும் உதட்டை பராமரிப்பது அவசியம்.சிலருக்கு முகம் மிகவும் பளிச்சென இருக்கும், ஆனால் உதட்டில் வெடிப்பு அல்லது கருப்பு படிந்திருக்கும்.அப்படி உதடு கருப்பாக மாறுவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா ?


ஒருவரின் முகத்தை பார்த்து பேசுகையில் கண்கள் மற்றும் உதடுகளை பார்த்து பேசுவது வழக்கம்.முகத்தின் அழகிற்கு முக்கிய பங்கு வகிக்கும் உதட்டை பராமரிப்பது அவசியம்.சிலருக்கு முகம் மிகவும் பளிச்சென இருக்கும், ஆனால் உதட்டில் வெடிப்பு அல்லது கருப்பு படிந்திருக்கும்.அப்படி உதடு கருப்பாக மாறுவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா ? நீங்கள் பின்பற்றும் இந்த பழக்கத்தினால் தான் உங்கள் உதடு கருப்பாக மாறுகிறது.
போதுமான ஈரப்பதம் இல்லை : சுறுசுறுப்பான உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியமானது.அதே போல் உதடுகளுக்கும் தண்ணீர் அவசியம்.உதடுகளுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் என்றால்  லிப் பாம் தான். உதடுகளை எப்போது ஹைட்ரேட் செய்வது முக்கியம். வறட்சியான உதடுகள் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.அவற்றை தவிர்க்க ஷியா எண்ணெய், கோகோ எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
இறந்த செல்களை அகற்றுவதில்லை : உதடுகளின் வெளிபுறமானது ஈரப்பதத்தை எளிதில் இழக்க செய்கிறது.இதனால் உதட்டில் வெடிப்பு உண்டாகிறது. சருமத்தில் இறந்த செல்களை நீக்குவது போல உதட்டிலும் இறந்த செல்களை நீக்க வேண்டும்.அதற்கு வாரம் இரண்டு முறை உதடுகளை எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள்.அதாவது உதடுகளுக்கு என்று பிரத்யேகமாக ஸ்க்ரப் ( scrub )உள்ளது. அது உதட்டிலிருந்து இறந்த செல்களை நீக்கும்.

சூரிய ஒளி : முகத்தில் சூரிய ஒளி பட்டால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படமோ அதே அளவு உதட்டிற்கும் ஏற்படும்.வெளியே செல்லும் போது முகத்திற்கு சன் ஸ்கீரின்  அப்ளை செய்கிறோம்.ஆனால் உதட்டிற்கு எந்த ஒரு பராமரிப்பும் செய்யாமல் இருப்பது உதடு கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணமாக மாறுகிறது. சூரிய ஒளியில் செல்லும் போது SPF30 உள்ள லிப் பாமை ( lip balm ) பயன்படுத்துங்கள்.
புகைப்பழக்கம் :  உதடுகள் கருப்பாக மாறுவதற்கு முக்கியமான காரணம் புகைப்பிடித்தல் .புகையை உள் இழுக்கும் போது அதில் இருக்கும் நிகோடின் மற்றும் தார் உதடுகள் கருப்பாக காரணமாக இருக்கின்றன.  எனவே புகைப்பழக்கத்தை தவிர்த்தல் நல்லது.
உதடுகளை பராமரிப்பது இல்லை : உதடுகளை பராமரிக்க  இரவு தூங்குவதற்கு முன்பு வழக்கமாக்கி கொள்ளுங்கள்.நீங்கள் அதிகம் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர் என்றால், உதடுகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.உதடுகளை பற்களால் கடிக்காதீர்கள். கைகளால் உதடுகளை அடிக்கடி தொட வேண்டாம். ஆர்கானிக் பொருட்களை நீங்கள் விரும்புவீர்கள் என்றால் ரோஸ் ஆயில், ஆரஞ்சு ஆயில், லெமன் ஆயில்,வைட்டமின் இ, மிண்ட் ஆயில், கிளிசரீன் ( Glycerine)கொண்ட லிப் சீரத்தை ( lip serum) ஒரு நாளைக்கு மூன்று முறை பயன்படுத்தலாம். அல்லது வீட்டில் இருக்கும் பாதாம் எண்ணெய்யை இரவு தூங்கும் முன்பு நன்கு மசாஜ் செய்துவிட்டு தூங்கினால் இரத்த ஓட்டத்தை சீராக்கும். அழகான கவர்ச்சியான ரோஸி லிப்ஸை நீங்கள் பெறலா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி