தங்கத்தின் மேன்மை

 மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு 

அவர்களுக்கு #கவிதாயினி ரேகா அவர்களின் வாழ்த்து கவிதை






திருச்சுழி தந்த செல்வமம்மா - அது

தங்கத்தின் மேன்மையை மிஞ்சுதம்மா!



மல்லாங்கிணற்றில் உதித்ததம்மா - அது

மேதினி போற்றிட உயருதம்மா!


கலைஞர் என்னும் சிப்பியில் சேர்ந்து 

ஜொலிக்கும் ஜொலிப்புக்கு எல்லையில்லை!

உம் நெஞ்சில் நிலைக்கும் தமிழுக்கும் இனிமேல்

வளர்ச்சியில் குறைவோ என்றுமில்லை!


தொல்லியல் துறையும் ஏங்கியதே!

கல்வெட்டுகள் மைசூரில் தூங்கினவே!

செம்மொழி மையம் பொலிவுறவே

நீயும் வந்தாய் ஏற்றிடவே!


தொழில்துறை உம்மைக் கண்டவுடன்

ஆக்சிஜன் தேவை தீர்ந்ததய்யா!

அயலகப் பல்கலை அனைத்துமின்று

தமிழ் இருக்கைகள் எண்ணி நோக்குதய்யா!


தமிழ் நாடும் இன்று ஏற்றம் பெற்று

தந்தையின் கனவை மெய்ப்பித்ததே!

என்றும் நமது அண்ணாவும் கலைஞரும்

நீங்காது நெஞ்சினில் வாழ்கிறாரே!

வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

கண்டமைக்கு பெருமை

 கொள்கின்றேன் 🙏🙏🙏


திரு மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ❤️🙏❤️

#கவிதாயினி ரேகா❤️🙏❤️


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி