அசைவ உணவுகள் சமைக்கும்போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்

 அசைவ உணவுகள் சமைக்கும்போது நாம் பொதுவாக செய்யும் 6 தவறுகள் என்னென்ன... 





இறைச்சி சமைக்கும் போது நீங்கள் செய்யும் பொதுவான தவறுகள் என்னவென்றும், அதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனையையும் பின்பற்றி சமைத்துப் பாருங்கள், அதன் சுவை உங்களுக்கு பிடித்த உணவகத்திலிருந்து வரும் உணவைப் போல இருக்கும்.


​லீன் மீட் - கோழியின் மார்பகப் பகுதி


கோழி மார்பக பகுதி மற்றும் மிருதுவான பகுதி இறைச்சியில் மிகக் குறைந்த அளவு கொழுப்புகள் மட்டுமே உள்ளன. இதனை அதிகமாக சமைக்கும் போது அவை கடினமாகவும், உலர்ந்ததாகவும் மாறக் கூடும். இதனை தடுக்க இறைச்சியை உப்பு நீரில் போட்டு வைத்து விட்டு பின்பு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இறைச்சி கடினமடைவது தடுக்கப்பட்டு, மென்மையாக இருக்கும்.


கோழியை முழுவதுமாக சமைத்தல்


முழு கோழியை அதிக வெப்பத்தில் வைத்து சமைப்பதும் கூட தவறான செயல் தான். முழு கோழி இறைச்சியை அதிக வெப்பத்தில் வைத்து, சமைக்கும்போது கோழியின் வெளிப்புறப் பகுதிகள் விரைவில் சமைக்கப்பட்டு விடும், உட்புறப் பகுதிகள் முழுவதுமாக வேகாமல் இருக்கும். இதனை சரி செய்ய, ஒரு முழு கோழி இறைச்சியையும் நீங்கள் சமைக்க உள்ளீர்கள் எனில் அதை மெதுவாக சமைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


​தவறான நேரத்தில் சுவையூட்டிகள் சேர்த்தல்


நீங்கள் இறைச்சியை முழுதும் சமைத்து முடித்த பின், சுவையூட்டிகள் சேர்க்கக் கூடாது. சமைத்து முடித்த பின், சுவையூட்டிகள் சேர்த்தால் அதனை இறைச்சிகள் உறிஞ்சாது. நீங்கள் சமைக்காத கோழியை சுவையூட்ட விரும்புகிறீர்கள் எனில், அதனுடன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் மசாலாத் தூள் சேர்த்துக் கொண்டவுடன் சமைக்கச் செய்யலாம்.


இறைச்சியை காற்றோட்டமாக வைப்பது


சமைப்பதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் இறைச்சியை ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து காற்றோட்டமாக வைப்பது நல்லது என்று கருதுகிறோம். ஆனால் அதனால் சமைக்கும்போது அதன் சுவையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இறைச்சியை வெளியில் அப்படியே வைப்பது அதன் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் அந்த இறைச்சி பிரெஷ்ஷாக இல்லாமல், சற்று மங்கலாக நிறம் மாறிவிடும். அதோடு இப்படி சமைப்பதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பாகவே இறைச்சியை வெளியில் எடுத்து வைப்பதால் , இறைச்சியின் வெளிப்புறத்தில் அதிக அளவில் ஈரப்பதம் ஏற்பட்டுவிடும்.


​அதிக நேரம் சமைத்தல்


இறைச்சியை அதிக நேரம் சமைப்பது, அதனை ஓவர் குக் செய்து விடும். இதனால், இறைச்சியின் சுவை மற்றும் அதன் சத்துகள் மாறிவிடும். இதனால் இறைச்சி சரியாக வெந்து விட்டதாக நீங்கள் உணரும் தருணம் அடுப்பை நிறுத்திவிட்டு பாத்திரத்தை மூடிவிட வேண்டும். ஏனெனில், இறைச்சி சிறிதளவு சமைக்கப்படாமல் இருந்தால் கூட நாம் அதனை அப்படியே மூடி வைக்கும்போது அதில் உள்ள சூட்டின் மூலமே இறைச்சி முழுமையாக வெந்து விடும்.


​தவறான எண்ணெய்களைப் பயன்படுத்துதல்


கடல் உணவை சமைக்கும்போது அதற்குத் தகுந்த சரியான எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் என்று கூறுகின்றனர் சமையல் நிபுணர்கள். மேலும், கடல் உணவுக்கு ஆலிவ் எண்ணெயின் சுவையை மக்கள் விரும்புவதாகவும் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி