ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நகரம் பகவான் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பகவான் மஹாவிஷ்ணு, பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகியோர் ஒருசேர வீற்றிருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர், பக்தர்களுக்கும், வைணவர்களுக்கும் மிகச் சிறந்த புண்ணியத் தலமாக விளங்குகிறது. கலைவிரும்பிகளை இத்தலதிலுள்ள சிற்பங்கள் மற்றும் பழங்கால ஓவியங்கள் கவர்ந்திழுக்க வல்லவை. இத்திருத்தலமானது, ஆண்டாளின் ‘திருப்பாவை’ மற்றும் பெரியாழ்வாரின் ‘திருப்பல்லாண்டு’ ஆகிய மஹாவிஷ்ணு பக்திப்பதிகங்களைத் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியுள்ளது. தமிழ் வேதம்- ஆழ்வார் பாசுரம் என்று போற்றப்படும் இப்பக்திப்பாடல்கள் இத்திருக்கோயிலில் நாள்தோரும் இசைக்கப்படுகின்றன
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும்
இன்று 03,08,2021 இக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழாவின் காணொளி மற்றும புகைப்படங்கள்
தகவல்
திருமதி ஜெயந்தி சதீஷ்
ஸ்ரீவில்லிபுத்தூர்
Comments