மிஸ்ஸிம்மா பிரியதர்ஷினி

 

சார்பட்டா பரம்பரை படத்தில்  மிஸ்ஸிம்மாவாக நடித்தவர்... யார் தெரியுமா?

 



பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை கடந்த மாதம் ஓடிடி பிளாட்ஃபார்மில்  வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது



 

குத்துச் சண்டையை மைய்யப்படுத்தி 1970களில் வட சென்னையில் இருந்த சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரைக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு  அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது

 

 

ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், ஜான் கோக்கென் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஜான் விஜய் டாடி கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்

அவருக்கு இந்தப் படம் பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது.

   


ஆங்கிலோ இந்தியன் நபராக பட்லர் இங்கிலிஷில் பட்டையை கிளப்பியிருந்தார்.


இவரின்  மனைவி மிஸ்ஸிம்மா

 மிஸ்ஸிம்மாவாக நடித்தவர்  பிரியதர்ஷினி

 ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக மிஸ்ஸிம்மா கேரக்டரில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளார்

இப்படத்தில் இவரின் நடனம் மிக கலக்கல்

 பிரியதர்ஷினி ராஜ்குமார் குறித்த சுவாரசிய தகவல்களை இங்கே காணலாம்

     நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார் தமிழ் சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார்

இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பிரேமி என்ற சீரியலில் மூலம் அறிமுகமானார். இந்த சீரியலில் ரேணுகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியதர்ஷினி.

       நடுவே  சினிமாவில் இருந்து விலகி ஆஸ்திரேலியாவில் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய பிரியதர்ஷினி, 2012ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவுக்கு திருமபினார்


முன்னணி நட்சத்திரங்களுடன் பலருடன் நடித்தும் மற்றும்   தொடர்ந்து இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்

 

 கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அனாமிகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்

ரெமோ, கவன், மிஸ்டர் சந்திரமவுலி, தனிமுகன், நீயா 2 .அச்சம் என்பது மடமையடா, நேர் கொண்ட பார்வை ,வர்மா, சங்கத்தமிழன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கவன் படத்தில் பாவனா என்ற கேரக்டரில் நடித்தார். அவரது கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

பிரியதர்ஷினி.. பல டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் இவர்  பறவைகள், நிலா, இறகை போலே, The Masculinity, The Call, மாதவி உள்ளிட்ட பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்

.. சரஸ்வதி கல்வி கலாச்சார மற்றும் அறக்கட்டளையை நடத்தி வரும் பிரியதர்ஷினி, பரதநாட்டியம் நடனமும் கற்றவர் ஆவார். சார்பட்டா பரம்பரை படத்தில் டாடியாக நடித்த ஜான் விஜய்க்கு மனைவியாக ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார் நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார்.

இவர் நடித்து வெளிவரவிருக்கும் படங்கள்

1.ரகடம் 2.பீப் 3.பொன் மாணிக்கவேல்4.நர்மதா5.காகிதபூக்கள்6.பாயும் ஒளி நீ எனக்கு 7 அஷ்டகர்மா 8.வெற்றி 10.ஓ மை டாக்

 பிரியதர்ஷனி மிக தேர்ந்த நடிகை.டான்ஸர், மற்றும் சிறந்த சமூகசேவகி ஆவார்

சென்னையில்  பிறந்த இவர் ஓவியக்கல்லுரியில்  இளநிலை பட்டம் பெற்றவர்

பல விளம்பரபடங்களுக்கு அப்போதே மாடலிங் செய்துள்ளார்

இவர் பல ஆங்கில நாடகங்களில் Alliance Francais as well as Max Muller Bhavan குழுக்களில் நடித்து சிறந்த நடிகை விருது பெற்றுள்ளார்

இவர் டாக்டர் பத்மா சுப்பிரமணியன் அவர்களிடம் முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ளார்

Saraswathi Educational Cultural and Charitable Trustன் செயலாளராக இருக்கும் இவர் பல கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்

அக்டோபர் 2018 ல் இவர் Dazzle Mrs India World Classic 2018 என்ற பட்டத்தை தலைநகர் புதுடில்லியில் பெற்று உலகம் முழுவதையும் தன்னுடைய கவனத்தை ஈர்த்தார்

இவருடைய தயாரான Dr CK Gariyali IAS அவர்களுடன் இணைந்து எழுதிய புத்தகமான Transgender on India - Achievers and Survivors அனைத்து தரப்பு மக்களை கவர்நது அந்த இனத்தின் மிமிமுமீது மக்கள் கொண்டிருந்த தவறான போக்கை  மாற்றியது  அந்த இனத்தின் சமுதாய அக்கறையை நாம் உணர இந்த புத்தகம் பெருமளவில் உதவியது என சொல்லலாம்

இவருக்கு பீப்பிள் டுடே சார்பாக வாழ்த்துகள்

-உமா தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி