சகுந்தலா ஸ்ரீனிவாசனின் காதல் கவிதைகள் எழுதும் நேரம்

 

காதல் கவிதைகள் எழுதும் நேரம்




---சகுந்தலா ஸ்ரீனிவாசனின் கவிதைகள்

1 .ஏனென்றால் நீ வேண்டும்



ஏன் அழ வேண்டும்

ஏன் புன்னகைக்க வேண்டும்
ஏன் சினம் கொள்ள வேண்டும்
ஏன் தவிப்புக்குள்ளாக வேண்டும்
ஏன் தனிமை வேண்டும்
ஏன் பசிக்கமாலிருத்தல் வேண்டும்
ஏன் தூக்கத்தை இழக்க வேண்டும்
ஏன் பைத்தியமாக வேண்டும் ...
ஏனென்றால் நீ வேண்டும்
என்பதற்காகத்தான்
இவ்வளவும்



2 .உன் கோபத்தில்
நான் யார்...


மௌனம் கொள்
மென்று விழுங்கு
உமிழ்நீர் உறைய வை
உலகை நிறுத்து
வானை உடை
வாளினை கூர்செய்
நீண்ட தூரம் செல்
நீளும் காதலை அமைதியாக்கு..
இப்போது சொல்
உன் கோபத்தில்
நான் யார்...



3 .என் விழிகளுக்கான பருவமழை




.விழுந்து கிடக்கும்
மலர்களுக்கும்
இலைகளுக்கும்
நடுவில் சுற்றித்திரியும்
ஒற்றை எறும்பினைப்போல்
ஊர்ந்துக்கொண்டிருக்கிறேன்..
எந்நேரமும் பெருமழையொன்று
வருவதற்கான முகாந்திரத்தை
ஏற்படுத்தி தருகிறது மனது..
என் விழிகளுக்கான பருவமழையை
உன் வருகையினால் பொய்த்து விடச்செய்



கவிதைகள் by




சகுந்தலா ஸ்ரீனிவாசன்




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி