உசேன் போல்ட் பிறந்த நாள்!

 உசேன் போல்ட் பிறந்த நாள்!





'உலகின் அதிவேக மனிதர்', ஆறு முறை ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்றவர், அதில், மூன்று முறை ஹாட்ரிக்... அந்தச் சாதனைக்காரர். உலகம் முழுவதிலும் சிறந்த அத்லெட் ப்ளேயர் எனப் பெயர் பெற்ற உசேன் போல்ட், ஒரு சமூகப் போராளி!
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றோம், நூற்றுக்கணக்கான விளம்பரங்களில் நடித்தோம், வாழ்கையில் செட்டில் ஆனோம் எனப் பல அத்லெட் ப்ளேயர்கள் இருப்பதைப்போல #உசேன்_போல்ட் இருக்க விரும்பவில்லை. தன்னை நம்பி குவியும் முதலீடுகளை, தன்னை வளர்த்து எடுத்த நாட்டின் பக்கம் திருப்ப முயல்கிறார் உசேன் போல்ட். பூமா, நிச்சான் எனப் பல முன்னணி நிறுவனங்களில் விளம்பரத் தூதராக இருக்கும் உசேன் போல்ட்க்குப் பல விளம்பர வாய்ப்புகள் குவிகின்றன. விளம்பரங்களால் தான் மட்டுமல்லாமல், தன் நாடும் உயரவேண்டும் என்ற நல்ல எண்ணம் உசேன் போல்ட்க்கு உதிர்த்திருக்கிறது.
தன்னைவைத்து விளம்பரம் எடுக்க அணுகும் சர்வதேச நிறுவனங்களிடம், ''ஜமைக்காவில் விளம்பர ஷூட்டிங்கை எடுத்தால் விளம்பரத்தில் நடிக்கத் தயார்'' என கட் அண்டு ரைட்டாக ஒரே கண்டிஷன் போடுகிறார் உசேன் போல்ட். இந்த ஷூட்டிங் மூலம், 100 - 200 ஜமைக்கா இளைஞர்களுக்காவது வேலை கிடைக்கும் என நம்புகிறார் உசேன் போல்ட்.
நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்!
''ஜமைக்காவுக்கு ஷூட்டிங் எடுக்கவரும் விளம்பர நிறுவனங்கள், தங்களிடம் ஷூட்டிங்கிக்குத் தேவையான உபகரணங்கள் இருந்தாலும், ஜமைக்காவில் உள்ள நிறுவனங்களில்தான் வாடகைக்கு எடுக்க வேண்டும்'' என்ற ஒப்பந்தத்தையும் உசேன் போல்ட் போட்டுள்ளார். இதனால், ஜமைக்கா பொருளாதார அளவில் வளம் பெறும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. ''நன்றி உசேன்... நீங்கள் எங்களுக்காக வேலைவாய்ப்புகளைக் கொண்டுவருகிறீர்கள்'' என ஜமைக்கா மக்கள், மின்னல் மனிதனைக் கொண்டாடுகிறார்கள்
ஜமைக்காவில், சாதாரண ஒரு மளிகைக்கடைக்காரருக்கு மகனாக பிறந்த உசேன் போல்ட், தன் நாட்டு மக்கள் வருமானத்துக்காக எப்படிக் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நன்கு உணர்ந்தவர். தான் ஒரு முன்மாதிரியாக இருந்து விளம்பரக் கதவுகளை ஜமைக்கா பக்கம் திறந்துவிட்டால், தொடர்ந்து விளம்பர ஷூட்டிங் வரும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அவரது நம்பிக்கைக்கு ஏற்றாற்போல, பசுமை போர்த்திய வசந்தமாக ஜமைக்கா இருக்கிறது.
உசேன் போல்ட், தான் நடத்திவரும் தன்னார்வ அமைப்பின் மூலம், ஜமைக்காவில் உள்ள லட்சக்கணக்கண பள்ளிகளுக்கு உதவிகளைச் செய்துவருகிறார். விளையாட்டு மைதானம், லைசன்ஸ் பெற்ற கணித சாப்ட்வேர், கழிவறைகள் என தனது வேகத்தை உதவி செய்வதிலும் காட்டி வருகிறார். '
'பள்ளிகளுக்கும், படிக்கும் குழந்தைகளுக்கும் உதவ வேண்டும் என்பதே என் நோக்கம். இது என்னால் முடிந்த சிறிய உதவி'' என வெகுளியாகச் சிரிக்கிறார் போல்ட்.
உசேன் போல்ட், உலக மக்களின் இதயங்களை ஏன் வென்றார் என்று இப்போது தெரிகிறதா?

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி