சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது , எந்நாளும் தனது சொல்லாற்றலால் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஆற்றலை கவிதை வழி தந்தவரும், விவேகத்துடன் வேகம் கலந்து, அன்றும், இன்றும், என்றும் நம் தமிழ்த்திருநாட்டில் தனக்கென, தனி அடையாளத்தைக் கொண்டு புகழுடன், நம்மோடு வாழ்ந்து வருபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள். இன்று அவரை நினைவில் கொள்வோம். தேசத்துக்காக, தன் கவிதை வரிகளால், மக்களை விழிப்படையச் செய்த முண்டாசுக் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் அவர்கள். எட்டயபுரத்தில் 11.12.1882 ல் பிறந்த அறிவுச் சுடர், சமஸ்கிருதம், இந்தி. வங்காளம், ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளை கற்றுத் தெளிந்தார். தமிழ்மொழியின், இலக்கண இலக்கியங்களை, முறைப்படி பயின்றதன் காரணமாக, 1904 ஆம் ஆண்டு, சுதேசமித்திரன் இதழின் உதவி ஆசிரியர் ஆனார். பின்னர் அரசியலில் தீவிரம் கொண்டபோது கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி. யுடன் தொடர்பு ஏற்பட்டது, கல்கத்தாவில் நடைபெற்ற, காங்கிரஸ் சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது...
மே 29, உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி பிறந்த தினம் இன்று. சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் கவுரவ முதல்வராகப் பணிபுரிந்தபோது, ரவீந்திரநாத் தாகூரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். அவர்கள் இடையே மலர்ந்த நட்பு இறுதிவரை நீடித்தது. பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான அனைத்து தரப்பினரின் கருத்துகளும் இந்த இதழ்களில் இடம்பெற்றன. காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ், சி.எஃப்.ஆண்ட்ரூஸ், பிரேம்சந்த், லாலா லஜபதிராய், சகோதரி நிவேதிதை, ஜாதுநாத் சர்க்கார் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இந்த இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தனர். 20-ம் நூற்றாண்டின் முதல் 40 ஆண்டுகாலம் வரை, ஒன்றுபட்ட இந்தியாவின் முன்னணி தலைவர்கள், ஆட்சியாளர்களால் இந்த 2 இதழ்களும் மிகவும் மதிக்கப்பட்டன. இவர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டன. இதழியல், தேசத் தலைவர்கள் தொடர்பான நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ‘இந்தியா அண்டர் பாண்டேஜ்’ என்ற நூலை தனது அச்சகத்தில் அச்சிட்டதற்காக இவருக்கு அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது....
Comments