ஜெய் அனுமான் / ஆஞ்சநேயர் வரலாறு/ கவிதைத் தொடர் (3)

 ஜெய் அனுமான்    /  ஆஞ்சநேயர் வரலாறு/    கவிதைத் தொடர் (3)





 

 பெற்றவர்கள் அனுமனால் பெற்றனர் பேரின்பம்

 

 அப் பெருமையில் திளைத்து மகிழ்ந்து ஊரெங்கும்

 

 தேகபலனுக்கு பலகலைகள் கற்றுத் தேர்ந்திட

 

 தேடியே வாயு சென்று சுக்கிரவனிடம் சேர்த்திட

 

 அவை நடுவே  அனுமான் நின்றான் பணிந்து

 

 

 அனைவரின் மனதிலே அன்பாலே கலந்து

 

 

 சுக்ரீவன் தந்ததன்றே

  சேனாதிபதி பதவி

 

 சுற்றங்களான வானவர்கள் கொண்டாடினர் ஆரத்தழுவி

 

 

 வீரதீர சாகசத்தில் என்றும் வல்லவனாய்

 

 

 வேண்டுவோர்க்கு உதவிடும் உள்ளம் உள்ளவனாய்

 

 

 பிறர் நலம் காத்திட துணை நிற்பான் முதலே

 

 பெரியோர்களின் ஆசியால் பெற்றதும் திருவருளே

 

 சகோதரர்கள் கானகத்தில் சண்டையிட்ட காலம்

 

 

 சமரசம் காணாத வெறித்தன கோலம்

 

 

 நெறிதவறி  தீவினை  செய்தவன் வாலியே

 

 நிலைகுலைந்து சுக்கிரீவன் தடுமாறிய வேளையே

 

 இராமலட்சுமணன் அவ்வமயம் கானகம் வந்திட

 

 இருவரையும் பணிந்து சுக்ரீவனும் வரவேற்றிட

 

 

 வாலியின் தவறினை  இராமபிரானிடம் முறையிட

 

 

 வானரத் தலைவனி டம் சம்மதித்தார் உதவிட

 

 நீதியின் பக்கம் துணையாய் நிற்பேனென

 

 நெறிதவறிய வாலியை அழிப்பது உறுதியென

 

 எதிர்பாரா வாலிக்கு  இராமனால் முடிவு

 

 இடர் நீங்கி சுக்ரீவனுக்கு வந்ததிங்கு விடிவு

 

 

 இராமபிரான்  செயலினால் தீதொழிந்த  நிலையே

 

 

 எல்லோரும் மகிழ்ந்தனர் இராமனை வணங்கியே

(தொடரும்)




கவிஞர் .முருக. சண்முகம்

சென்னை




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி