நாளை முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி
தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடங்கியுள்ள இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக கூறியுள்ளார். சென்னையைப் பொருத்தவரை ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் நாளை முதல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
வேலைக்குச் செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
Comments