வெந்தய கீரை கோழி குழம்பு
குளிர்ச்சியான வெந்தைய கீரையை இதனுடன் சேர்த்து சமைத்தால் உடலுக்கு சூடு பிடிக்காது. பொதுவாக கிராமங்களில் நாட்டுக்கோழி குழம்புதான் வைப்பார்கள். அத்துடன் சிவப்பு பொன்னாங்கனி கீரையை போட்டு நன்றாக பிரட்டி சமைத்து சாப்பிடுவார்கள்.
வெந்தய கீரை இலைகளுடன் செய்யப்படும் இந்த கோழிக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். பொதுவாக கோழிக்கறி உடலுக்கு சூடு என்பார்கள். அதனால் மிகவும் குளிர்ச்சியான வெந்தைய கீரையை இதனுடன் சேர்த்து சமைத்தால் உடலுக்கு சூடு பிடிக்காது. பொதுவாக கிராமங்களில் நாட்டுக்கோழி குழம்புதான் வைப்பார்கள். அத்துடன் சிவப்பு பொன்னாங்கனி கீரையை போட்டு நன்றாக பிரட்டி சமைத்து சாப்பிடுவார்கள். அதேபோலதான் வெந்தைய கீரையையும் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் உணவில் ருசியும் கூடும். இதனை மெத்தி சிக்கன் என்றும் கூறுவார்கள்.
தேவையான பொருட்கள்
கோழி கறி – 1/2 கிலோ
வெந்தய கீரை – 1 கட்டு
வெங்காயம் – 2
தயிர் – 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
Comments