தக்காளி ஜூஸ் தினமும் அரை கிளாஸ் குடிச்சா
தக்காளி ஜூஸ் தினமும் அரை கிளாஸ் குடிச்சா
தக்காளி சாறானது சத்தான ஒரு பானமாகும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த பானமாக கருதப்படுகிறது. ஒரு ஆய்வின்படி தக்காளி சாறில் கபா (இயற்கையான அமினோ அமிலம்), பயோ ஆக்டிவ் கலவைகள் உள்ளன. தக்காளிகளை விடவும் தக்காளி சாறு அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட தக்காளி சாறில் லைகோபீன் அளவு அதிகரிக்கிறது என்றும் 13 ஆக்சோ ஓ.டி.எ ஆனது புதிய தக்காளி சாற்றில் மட்டுமே காணப்படுகிறது. இது தக்காளிகளில் காணப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே தக்காளி சாறை அருந்துவதன் மூலம் நாம் பெறும் ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்ப்போம்.
மேலே கூறியப்படி 13-ஆக்சோ-ஓ.டி.எ தக்காளி சாறில் மட்டுமே காணப்படுகிறது. இது உடலில் அதிக கொழுப்பு இருப்பவர்களுக்குக் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இது பெருந்தமனி தடிப்பு, பக்கவாதம் போன்ற சிக்கல்களை சரி செய்ய உதவுகிறது. தக்காளி சாறை உட்கொள்வது லிப்பிட் வளர்சிதை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த உதவும். இதனால் நாட்பட்ட உடல் பருமன் பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
நீரிழிவு நோய்க்கு உடல் பருமன் முக்கியமான காரணியாக உள்ளது. தக்காளி சாறு உடல் கொழுப்பின் அளவை குறைக்க உதவுவது மட்டுமில்லாமல் அதிக குளுக்கோஸ் அளவையும் குறைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது
தக்காளி சாறில் உள்ள லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற வலுவான கரோட்டினாய்டுகள் இருப்பது நோயெதிர்ப்பு தன்மைக்கு ஆதரவானதாக அறியப்படுகிறது. கரோட்டினாய்டுகள் உயிரணு பெருக்கத்தில் ஈடுப்படும் புரதங்களுக்கு உதவுகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக இது செயல்படுகிறது. இதனால் தக்காளி சாறு உட்கொள்வது உடலில் கரோட்டினாய்டுகளை அதிகரிக்கிறது.
ஆகவே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நோய் உண்டாக்க கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
லைக்கோபீன் புற்றுநோயை தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது. ஒரு ஆய்வின் முடிவுகளின்படி அமெரிக்காவில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக தக்காளி சாறு மற்றும் பிற தக்காளியால் செய்யப்படும் பொருட்களில் இருந்து மனிதர்களுக்கு லைகோபீன் கிடைக்கிறது. மேலும் இதனால் நுரையீரல், வயிறு, மார்பகம் போன்ற பல்வேறு இடங்களில் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தை குறைக்க முடியும். லைகோபீன் ஒரு வலுவான ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால் உடலில் ஃப்ரீ ரேடிக்கலை குறைக்க உதவும். இதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க முடியும் அல்லது அதன் வளர்ச்சியை குறைக்க முடியும்.
தக்காளி சாறு எப்படி செய்வது?
- தக்காளி- 3
- உப்பு- 1 சிட்டிகை
- தண்ணீர்- 200 மி.லி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் முழு தக்காளியை வைத்து வேகவைக்கவும். அதை சிறிது நேரம் கிளறவும்.
பிறகு தக்காளியை வெளியே எடுத்து அதன் தோலை உரித்து பிறகு அதை துண்டு துண்டாக வெட்டி அதில் இருந்து சாறு எடுக்கவும்.
எடுத்த சாறை வடிக்கட்டவும். அதை ஒரு க்ளாஸில் ஊற்றி உப்பு சேர்த்தால் தக்காளி சாறு தயார்.
விருப்பத்திற்கு ஏற்ப சுவைக்காக ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
Comments