நீச்சல் /கவிதை
நீச்சல்
கவிதை
எல்லோருமே அறிந்திருக்கும் வித்தை தான்.
எல்லா வெளிகளிலும்
நீந்தத்தெரிந்தவர்கள் தாம்
தண்ணீரில் என்பது கூடுதல் அறிவு
அதன் போக்கில்
எதிர்போக்கில்
என
எல்லோரும்
ஏதோ ஒரு வகையில்
நீந்தத்தான் செய்கிறோம்
கரைகள் தொட்டும்
மீண்டும் நீந்தி
மீண்டுமொரு கரை தொட்டு.....
மீண்டும் மீண்டும்
மீண்டுமாக
மீளாத நீச்சல்...
முற்பிறவியில்,
இப்பிறவியில்,
மறு பிறவியில் என
பிறவிப்பெருங்கடலிலும் நீச்சலே...
அலைகளும்
பேரலைகளும்
நீச்சலும் தொடர்கதையாகும்
எவையும்
ஓய்வதில்லை.
ஓயாதிருத்தலே பேரழகு!
#மனதின்ஓசைகள்
Comments