மிருதுவான சப்பாத்தியின் ரகசியம்

 

மிருதுவான சப்பாத்தியின் ரகசியம்



சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு காரணமாக இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறிப்பிடலாம். ஏனென்றால், இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருக்கவும் இவை உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி மிகவும் நல்லது.

சப்பாத்தி செய்யப் பயன்படுத்தப்படும் கோதுமையில், வைட்டமின் பி 1, பி 2, பி 2, பி 6 மற்றும் பி 9 நிறைந்துள்ளது. அதோடு கோதுமையில் சோடியம் மிக அதிகமாக உள்ளது. 120 கிராம் கோதுமையில் 190 மில்லிகிராம் சோடியம் உள்ளது. நீங்கள் செய்யும் மிருதுவான சப்பாத்தியில் வெஜ் அல்லது நான் வெஜ் குருமா சேர்த்து சாப்பிடால் ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போல வயது இது மிகவும் முதிர்ந்தவர்களுக்கு ஏற்ற உணவு ஆகும்.


நாம் சப்பாத்தி செய்யும் போது, அவை சாஃப்டாக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் சில சமயங்களில் அவை நாம் எதிர்பார்த்தது போல சாஃப்டாக வருவதில்லை. எவ்வாறு அவற்றை சாஃப்டாக வர வைப்பது என்பது போன்ற உங்களின் கேள்விகளுக்கு இங்கு விடையளித்துள்ளோம்


சப்பாத்திக்கு மாவு தயார் செய்யும்போது அதில் ஒரு கப் கோதுமை மாவிற்கு இரண்டு ஸ்பூன் மைதா சேர்க்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் இருந்தால், அதைக் கொண்டு சப்பாத்தி மாவு பிசையலாம்.

பின்னர் உப்பு, சுடு தண்ணீர் சேர்த்து கரண்டியால் கிளறவும். அதன் பின் கைகளால் மாவை நன்கு பிசைந்து கொண்டு சப்பாத்தி மாவு திரட்டும் கட்டையால் 15 நிமிடங்கள் நன்கு அடிக்கவும். அப்போதுதான் தண்ணீர் நன்கு உறிஞ்சப்பட்டு மாவு மிருதுவான பதத்தில் வரும். பின்னர் அரை மணி நேரம் ஈரத்துணி போட்டு ஊற வைக்கவும்.

இப்போது உருண்டைகளாக உருட்டி, தட்டையாக தயார் செய்யவும். தோசைக்கல் சூடானதும் திரட்டிய சப்பாத்தியை கல்லில் போட்டு இரு புறமும் பிரட்டவும். நன்கு அழுத்தும்போது சப்பாத்தி உப்பி வரும். தேவைப்பட்டால் அரை ஸ்பூன் எண்ணெய் தடவிக்கொள்ளலாம்.

இந்த செய்முறையில் சப்பாத்தி செய்ய முயற்சித்து பாருங்கள். அவை மிகவும் சாஃப்டானதாகவும், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி