கே.வி.மகாதேவன் நினைவு நாள் இன்று

 கே.வி.மகாதேவன் நினைவு நாள் இன்று


இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இறந்த தினம்: ஜூன் 21- 2001
கே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001), ஒரு தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர். 1942-ல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990-ல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.
திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், கந்தன் கருணை, தாய் சொல்லைத் தட்டாதே, படிக்காத மேதை, வசந்த மாளிகை எனப் பல புகழ் பெற்றத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கந்தன் கருணை மற்றும் சங்கராபரணம் ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் தேசிய விருதைப் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் கே. வி. மகாதேவன். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார்.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர்.
தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.
பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.
மகாதேவன் 1942 முதல் மனோன்மணி, பக்தகௌரி, அக்கினி புராண மகிமை, பக்த ஹனுமான், நல்ல காலம், மதன மோகினி ஆகிய படங்களுக்கு இசை அமைத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடினார். இவர் 2001-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி மரணம் அடைந்தார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி