இன்னுமொரு மழை

 இன்னுமொரு மழை








மழை பொழிந்த இரவொன்றில்
என் சுவாசங்களாகின்றன
உன் நினைவுகள்
ஒரு துளியையேனும் பருகாது
முன் நிற்கும் நீர்க்குடங்களில்
அசைகின்றன உன் பிரியங்கள்
வலைப்பொந்துகளில்
மறைந்திருக்கும் பதட்டங்களோடு
உயிர் தாங்கி நிற்கிறது
என் உடல்
தூரத்தே தெரியும் மலைகளைப் போல்
கண்ணில் தொடர்கின்றன
காட்சிப் பிம்பங்கள்
களைத்து இமை மூடிச் சற்றே சரிய
ஏதுமறியாத காற்று
புல்லாங்குழலுக்குள் நுழைய....
இசை வடிவமாய்
நான் எழுந்த போது
இசைப்பவனாய் நீ இருக்க
சம்மதித்து...
இன்னுமொரு மழை பொழிகிறது
என் நினைவுகளில்
-மஞ்சுளா

(இன்னுமொரு மழை தொகுப்பிலிருந்து )

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி