முருங்கை இலையில் இருக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா

 









முருங்கை இலையில் இருக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..

முருங்கையிலை கால்சியம் , புரோட்டீன் , பீடா கரோடின், இரும்பு சத்து, விட்டமின் சி இப்படி பல வகையான நன்மைகளைக் கொண்டிருக்கிறது.

கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முருங்கையிலை சூப் அல்லது முருங்கை இலை பொரியல் என ஏதாவதொரு வகையில் தினமும் சாப்பிட சொல்கின்றனர். அப்படி என்னென்ன நன்மைகள் அதில் இருக்கிறது தெரியுமா?
முருங்கையிலை கால்சியம் , புரோட்டீன் , பீடா கரோடின், இரும்பு சத்து, விட்டமின் சி இப்படி பல வகையான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இவற்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரியுமா?
நோய் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது : உடலில் நோய் அழற்சியை உண்டாக்கும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே எதிர்த்துப் போராடி சரி செய்யும். இதனால் புற்றுநோய், கீல்வாதம், முடக்கு வாதம் மற்றும் பல நோய்களுக்கு காரணமான அழற்சி நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது : நோய் தொற்று பாதிப்புகளிலிருந்து உடலை பாதுகாப்பதில் முருங்கையிலை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆய்வில் 1.5 ஸ்பூன் அளவுக்கு முருங்கை இலை பவுடரை தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர். அதோடு நீரிழிவு நோய், இதய பாதிப்பு , அல்சைமர் போன்ற பிரச்னைகளும் இருக்காது என்கின்றனர்.

இரத்த சர்க்கரை அளவை சீராக்கும் : இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நீரிழிவு நோய் உண்டாகிறது. இதனை சரி செய்ய முருங்கை இலையில் ஐசோதியோசயனேடுகள் (isothiocyanates) என்னும் பண்பு உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கி நீரிழிவு நோயிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

கொழுப்பைக் குறைக்க உதவும் : உடல் பருமனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு முருங்கை இலை கைக்கொடுக்கும். கொழுப்பு அதிகரிப்பால் இதய நோய்களும் வரும் எனவே உங்கள் டயட் பட்டியலில் முருங்கை இலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கல்லீரலை பாதுகாக்கும் : கல்லீரல் இரத்ததை சுத்தீகரித்து மெட்டாபாலிசத்தை அளிக்கிறது. இந்த வேலையை சிறப்பாக செய்ய கல்லீரலில் நொதிகள் உருவாகும். அந்த நொதி உருவாக்கத்திற்கு முருங்கை இலை பெரிதும் உதவுகிறது. எனவே முருங்கை இலையை தினமும் சாப்பிடுங்கள்

வயிற்றுக்கு நல்லது : முருங்கையிலையில் நார்ச்சத்தும் நிறைவாக இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் வாயுத்தொல்லை இருக்காது. மலச்சிக்கல் இருக்காது. நெஞ்சு எரிச்சல், வயிற்று மந்தம், அல்சர் போன்ற பாதிப்புகளிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

எலும்புகளுக்கு உறுதி : முருங்கையிலையில் கால்சியம் சத்து நிறைவாக இருப்பதால் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கிறது. அதோடு பாஸ்பரஸ்சும் இருப்பதால் கூடுதல் உறுதி அளிக்கிறது. தொடர்ந்து முருங்கை இலை சாப்பிட்டு வர எலும்பு புரை பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்

தாய்மார்களுக்கு பால் சுரத்தல் அதிகரிக்கும் : பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில், பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பதை அதிகரிக்க முருங்கை இலைகள் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை இலையில் புரதம், முக்கியமான வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவை குழந்தைக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

நச்சு நீக்கியாக செயல்படுகிறது : உடலின் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

சருமம் மறும் தலைமுடிக்கு நல்லது : முருங்கை இலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட், ஊட்டச்சத்துக்கள் நிறைவாக இருப்பதால் அவை சருமத்திற்கும், தலைமுடிக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றன. இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. சருமம் பளபளப்பைப் பெறுகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி